துணிவுடன் உன் விழிகளுடன் என் விழிகளும் சந்திக்க அங்கே ஒரு ஆனந்த பரவசம் மலர்ந்தது.
துடிக்கத் தொடங்கிய மனதில் காதல் கீதம் ஒலித்தது
காற்றில் அசையும் மரம் போல என் மனமும் இசையால் அசைந்தது.
கவிதை ஒன்று மனதுக்குள் வார்த்தைகளாக மலர அது காகிதத்தில் எழுத்துக்களாய் பிரசவமானதே...
நேராய்த் தேடும் என் கண்களை
ஜோராய் நீயும் பார்த்ததால் பரவசமானேன்.
நிமிஷம் மணித்துளிகளாக கரைய அந்த நிமிஷமே நான் மகிழ்ந்தேன்
பேசாமல் பேசும் உன் விழிகள்
புதுமை காட்டும் என்பதால் மனதில் இருந்த வெறுமை ஓடி மறைந்ததே
நடப்பது கனவா நனவா?
நெஞ்சம் கேட்கும் வினாவுக்கு இது நிஜம் தான் என பரவசத்துடன் பதில் அளித்தேன்.
-உஷா முத்துராமன்