தமிழ்நாடு இ பேப்பருக்கு தினசரி
வாசகர் கடிதம் அனுப்புவது
என்பது மிகுந்த மகிழ்ச்சியாக
உள்ளது தினமும் புதுப்புது
செய்திகளையும் அறிவு
களஞ்சியங்கள் அனைத்தையும்
தொகுத்து வழங்குவதால்
மிகுந்த உற்சாகம் அடைகிறது
மீண்டும் பாகிஸ்தான் வாலாட்டினால்
தக்க பதிலடி கொடுக்கப்படும்
என்ன மோடி அறிவிப்பு.
பஞ்சாபில் கள்ளச்சாராய
இறப்புக்கு தலைக்கு 10 லட்சம்
வழங்கப்பட்டது இனி வறிய நிலையில்
இருப்பவர்கள் கள்ளச்சாராயம் குடித்து
தனது வீட்டுக்கு நிவாரணம்
தேடிக் கொள்வார்கள்.
கள்ளச்சாராயம் விற்பவரை
தூக்கி உள்ளே போடாமல்
கள்ளச்சாராயம் குடித்து
இறப்பவனுக்கு பத்து லட்சம்
கொடுப்பது என்ன நியாயம்.
அதை கள்ளச்சாராயம்
விற்பவர்களிடம் இருந்து வசூல்
செய்ய வேண்டும். குழந்தைகள்
குண்டாக இருப்பது தவறு
என டாக்டர்கள் அறிவுரை.
செல்லூர் ராஜுக்கு முன்னாள்
ராணுவத்தினர் கண்டனம்.
வாயை கொடுத்து உடம்பில்
மாட்டிக்கொள்வதில் செல்லூர் ராஜு
கில்லாடி. மகாலட்சுமி வழிபாடு
பற்றிய தகவல் அற்புதம் சார்
30 கவிதைகளும் 30 ரகமாக இருந்தது
ஹரி கோபி சார் அவர்களின்
பொன்மொழிகள் அனைத்தும்
அரிய பொக்கிஷம்.
பிரமோஸ் ஏவுகணை மன்மோகன்
சிங் காலத்தில் ஏற்பட்டது
இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது
என்ன டி ஆர் டி ஏ அறிக்கை.
தமிழகத்தில் பலமான தலைமை
அவசியம் என பவன் கல்யாண்
தேவையில்லாமல் தமிழகத்தில்
மூக்கை நுழைக்கிறார்.
அமெரிக்கா சீனா வரியை 10%
குறைக்க வாய்ப்பு உள்ளது
இந்தியா பாகிஸ்தான் இடையே
நடக்க இருந்த அணு ஆயுதப் போரை
நிறுத்தி விட்டேன் என டிரம்ப்
கூறுவது வேடிக்கையாக உள்ளது
ராகுல் ராமர் பற்றி சர்ச்சை கருத்தை
கூறி அவர் மீது உத்தர பிரதேசம்
நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது. அடுத்து
உங்கள் வார இதழ் என்று வரும்
என்று ஆவலோடு காத்துக் கொண்டு
இருக்கிறோம் எங்களை
காக்க வைப்பதில் எப்படி உங்களுக்கு
என்ன மகிழ்ச்சி விரைந்து
அனுப்புங்கள் சார்
இப்படிக்கு உங்களின் ஆரம்பகால
வாசகர்
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி.