tamilnadu epaper

தூங்கவிடாமல் துன்புறுத்தப்பட்டேன்’ - தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் கண்ணீர்

தூங்கவிடாமல் துன்புறுத்தப்பட்டேன்’ - தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் கண்ணீர்

பெங்களூரு:

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ் தன்னை விசாரணை என்ற பெயரில் தூங்கவிடாமல் துன்புறுத்தியதாகவும், அவதூறாகப் பேசியதாகவும், மிரட்டியதாகவும் நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (32) துபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தாக கடந்த 3-ம் தேதி பெங்​களூரு விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார். இதுகுறித்து வழக்​குப்​ப​திவு செய்த வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் அவரது வீட்​டில் நடத்​திய சோதனை​யில் ரூ.2.67 கோடி ரொக்​கப்​பண​மும், ரூ.2.06 கோடி மதிப்​பிலான தங்க நகைகளும் சிக்​கின‌. இதையடுத்து அதி​காரி​கள் அவரை மார்ச் 24-ம் தேதி வரை காவலில் எடுத்து விசா​ரணை நடத்தி வரு​கின்றனர்.

இந்நிலையில், விசாரணையின் போது தன்னை தூங்கவிடாமல் துன்புறுத்தியதாகவும், அவதூறான வார்த்தைகளை பிரயோகித்ததாகவும், மிரட்டியதாகவும் ரன்யா தெரிவித்துள்ளார். பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்போது ரன்யா இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரன்யா ராவின் சில புகைப்படங்கள் இணையத்தில் பரவின. அதில் அவர் வீங்கிய கண்கள், காயம்பட்ட முகத்துடன் இருப்பது தெரிந்தது. இந்நிலையில்தான் ரன்யா நீதிமன்றத்தில் ‘நான் உடைந்து போயுள்ளேன்’ என்று கூறி கதறி அழுததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக நேற்று, ரன்யா ராவிடம் இருந்து தங்​கத்தை வாங்​கிய​தாக பெங்​களூருவை சேர்ந்த நட்​சத்​திர விடுதி உரிமை​யாள​ரு​ம் தொழில​திபரு​மான தருண் கே ராஜை கைது செய்தனர். அதேபோல், தங்​கக் கடத்​தல் வழக்​கில் ரன்யா ராவுக்கு அவரது வளர்ப்பு தந்​தை​யும் போலீஸ் டிஜிபி​யு​மான ராமசந்​திர ராவ் உதவிய​தாக தகவல் வெளி​யானது. இதனால் கர்​நாடக அரசு அவரை விசா​ரிக்​கு​மாறு கர்​நாடக சிஐடி (குற்​றப்​பிரிவு புல​னாய்​வு துறை) போலீ​ஸாருக்​கு உத்​தர​விட்​டது.

இந்த வழக்கில் நாளுக்கு நாள் புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. பல முக்கியப் பிரமுகர்கள் தொடர்புகள் குறித்த விசாரணை நீள்கிறது. அந்தவகையில் பாஜக முக்கியத் தலைவர் அமித் மாள்வியா இன்று தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், முதல்வர் சித்தராமய்யாவுடன் ரன்யா எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். கூடவே, “இந்த வழக்கு இப்போது காங்கிரஸ் தலைவரின் வாயிலை வந்தடைந்துள்ளது.” என்று கிண்டல் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.