tamilnadu epaper

தூத்துக்குடியில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம்

தூத்துக்குடியில் கோடைகால  அறிவியல் பயிற்சி முகாம்


தூத்துக்குடி, மே 5

 தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிக்கை: 

 தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி மாமாநகராட்சி இணைந்து பள்ளி மாணவர்களின் கோடை கால விடுமுறையை பயனுள்ள அறிவுப் பயணமாக மாற்றும் நோக்கத்தில், ‘ஏனென்று கேள்’ எனும் தலைப்பில் கோடை கால அறிவியல் பயிற்சி முகாம் நடத்துகின்றன.  

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர்நகர் பகுதியில்

அமைந்துள்ள அறிவியல் பூங்கா வளாகத்தில் மே 25-ம் தேதி வரை இந்த பயிற்சி நடக்கும். இதில் 3-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் இலவசமாக பங்கு பெறலாம். 

தினமும் மாலை 3 மணி முதல் 7 மணி வரை மாணவர்களின் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் வகுப்புகளும் செய்முறைப் பயிற்சிகளும் நடைபெறும்,மேலும், இம்முகாமில் முதற்கட்டமாக, கணக்கும் இனிக்கும், கைகளில் கண்ணாம் பூச்சி, அறிவியல் பரிசோதனைகள், ஒரிகமி, கற்பனையும் கைத்திறனும், பொம்மலாட்டம், பலூனபலூனில் பொம்மைகள், மந்திரமா தந்திரமா, அறிவியல் கோமாளி, அறிவியல் ஆனந்தம், கதை சொல்வோம் - கதை உருவாக்குவோம், விளையாட்டை கற்போம், நம்புவீர்களா? போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.