அலங்காநல்லூர், ஏப்ரல்.4.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள தெ.மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் 44ம் ஆண்டு பங்குனி பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் உலக நன்மை வேண்டி அம்மனுக்கு திருவிளக்கு பூஜை,சுமங்கலி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு கரகம் அலங்கரிக்க சென்று அம்மன் வீதி உலா வருதல் நடைபெற்றது. முளைப்பாரி அழைத்தளுடன் அம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல், மாவிளக்கு,தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை தெ.மேட்டுப்பட்டு அகமுடையார் சமுதாயத்தினர் மற்றும் மன்னர் மருதுபாண்டியர் இளைஞர் பேரவை முக்குலத்தோர் நல சங்கம் உட்பட கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் .