tamilnadu epaper

நடிகனும் தெய்வமும்

நடிகனும் தெய்வமும்

 

               ரவிக்குமார் மாலை சீக்கிரமே அலுவலகத்திலிருந்து வந்து விட்டார்... இன்று டிசம்பர் 31... இரவு புத்தாண்டு பிறக்கிறது... புத்தாண்டை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் மாலையே குடும்பத்துடன் வெளியே கிளம்பி விடுவார் ரவிக்குமார்...

 

      "ஏங்க இந்த வருசம் நாம சக்தி மாரியம்மன் கோயிலுக்கு போறோம்.. ஆமா சொல்லிட்டேன்... "

      " இல்லம்மா அது ரொம்ப தூரம்... நம்ம பசங்க ரெண்டு பேருமே எக்ஸிபிசன் போயிட்டு ஹோட்டலுக்கு போகனும் என்றார்களே... கோயிலுக்கு நாளைக்கு போய்களாம்... சுமதி.. என்ன..." என கூறிய ரவிக்குமார் அவளைப் பார்த்தான். 

 

         "ஏன் எக்ஸிபிசன் நாளைக்கு போயிக்கக் கூடாதா..

முதலில் புது வருசத்துக்கு கோயிலுக்குதான் முதல்ல போகனும் அப்புறம்தான் மத்ததெல்லாம்.."

 

         நவீன் ஆறாவதும் ரன்ஜித் ஏழாவதும் படிக்கிறார்கள்... விபரம் கொஞ்சம் தெரிந்த பிள்ளைகள்தான்.. அவர்களும் விடாமல் அப்பாவிடம் தகராறு..

"அப்பா புது வருசத்தில எங்கள ஜாலியாக இருக்க விடுங்க..ஆமா.." ரன்ஜித்..

"ஆமாம் அப்பா.. ப்ளீஸ்.. " என்றான் நவீன் அவன் பங்குக்கு...

ரவிக்குமாருக்கு என்ன செய்வது என முடிவெடுக்க முடியாமல், குழந்தைகளையும் மனைவியையும் பார்த்துக் கண்டே இருந்தார்... பிறகு திடீரென 'நாம போகலாம்..' என கிளம்ப அனவரும் காரில் ஏறி அமர்ந்தனர்.

 

      கார் நேராக போய்க் கொண்டே இருந்தது.. பத்து கி.மீ வந்தாகிவிட்டது...

ரவிக்குமார் கேட்டார், "நாம இப்ப ரவுண்டானா வந்தாச்சி.. வலது பக்கம் திரும்பினா கோவிலுக்கு போகலாம்... இடது பக்கம் போனா எக்ஸிபிசன் போற வழி... இப்ப எந்த பக்கம் போகனும்... சொல்லுங்க.." என்றான்.

 

     "ஏங்க இத கேட்கிறீங்க.. வலது பக்கம் போங்க..." சுமதி..

"இல்லப்பா...இடது பக்கம்தான்..." பையன்கள் இரண்டு பேரும்...

" ஓகே...ஓகே..

முதல்ல நாம எல்லாரும் இந்த சங்சனில் டீ சாப்பிடுறோம்... அப்புறம் பேசிக்கலாம்..." என்றவாறே காரை எதிர்த்த டீ கடை அருகில் நிறுத்திவிட்டு டீக்கடைக்குள் போனார்கள்...

எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது ரவிக்குமார் நண்பர் பிரவீன் தன் குடும்பத்துடன் உள்ளே வர, இருவரும் பார்த்துக் கொள்ள, அனைவதும் சேர்ந்து பேசிக் கொண்டனர்..

"ரவி.. சூப்பர் ஸ்டார் மோகன் மிக அருகினில் பார்த்தோம்.. சூட்டிங் நடக்குது..ப்ரியா இருக்கு..இப்ப போனா நீங்களும் பார்க்கலாம்..

இந்த தடவ மிஸ் பண்ணாத.. இப்ப போனீங்கன்னா நல்லா என்ஜாய் பண்லாம்.." 

நிறுத்தாம சொல்லிக் கொண்டே இருந்தார் பிரவீன்.. 

இதைக் கேட்ட ரன்ஜித்தும் நவீனும்..."அப்பா ... சூப்பர் ஸ்டார்ப்பா.." கூவ.. அவன் சுமதியை பார்க்க, அவள் சிரித்தாள்..

"எங்கப்பா...எந்த இடத்தில..." ரவிக்குமார் கேட்க, "இப்படியே வலதுபக்கம் போப்பா..

பண்ணையார் பங்களாவிலதான் சூட்டிங்.. சீக்கரம் போங்க..." என பிரவீன் சொல்ல, புறப்பட்டனர் அனைவரும்...

கார் பண்ணையார் பங்களா அருகில் செல்ல.. கலர் கலர் விளக்குகள் மின்ன ரோடு முழுவதும்‌ பிரகாசம்...ஒளி வெள்ளமாக இருந்தது... சூட்டிங் நடக்கிற இடமாச்சே...

அங்க இருந்த ஒரு நபரிடம் " சூப்பர் ஸ்டார் இங்கதானே இருக்கார்.." என கேட்க, 

அந்த நபர் " நீங்க இன்னும் கொஞ்சம் முன்னாடி போனீங்கன்னா கோவில் வரும்.. கோவில் அருகில் பந்தல் போட்டிருக்கும்.. அங்க போங்க..." என கூறி முடிக்க, ரவிக்குமார் காரை உடனே கிளப்பினார்... கார் பறந்தது.. கார் கோவில் அருகே நிறுத்திவிட்டு அனவரும் இறங்க, அங்கிருந்த ஒரு பெண் போலீஸ், "சீக்கிரம் கோயிலுக்குள் போங்க.." என விரட்ட, கோயிலின் இருப்பு கேட் அருகில் சென்றதும், கேட்ல இருந்த போலீஸ்காரர் " உள்ளே போங்க.. எனக்கூறி, " பத்தாச்சி.." என்றார்.. ரவிக்குமார் கடிகாரத்தை பார்த்து, "பதினொன்று ஆச்சிங்க..." என சொல்ல, போலீ்ஸ்காரர் சிரித்துக் கொண்டே இரும்பு கேட்டை சாத்தினார்..

வண்ண விளக்குளால் ஜொலித்து கோவிலின் உட்புறம்.. அங்கிருந்த ஒருவர்..கோயில் மூலஸ்தானம் போங்க... சத்தம் போடாதீங்க... சூப்பர் ஸ்டார் சாமி கும்பிடுகிறார்.. நீங்களும் சாமி கும்பிடுங்க.. சத்தம் போடக் கூடாது..' என சொல்லி உள்ளே அனுப்பி வைத்தார்...

 சூப்பர் ஸ்டார் சாமி கும்பிட அவரருகில் வரிசையாக அனைவரும்..எதிர் வரிசையில் இவர்கள் நின்றனர்... சுமதிக்கு ஆச்சரியமாக இருந்தது... சக்தி மாரியம்மனை வேண்டிக் கொண்டாள்...

சட்டென சூப்பர் ஸ்டார் " எல்லோரும் சாமிய பார்த்து கும்பிடுங்க... என்னையே பார்க்க் கூடாது... வெளியே வந்ததும் செல்ஃபி எடுத்துக்கலாம்..." என்றார்... மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன..

தீபாராதனை காட்ட மாரியம்மனை அனைவரும் வணங்கினர்..

சூப்பர் ஸ்டார் வெளியே கிளம்ப, 

"உங்கள் எல்லோருக்கு ஒன்று கூறுகிறேன்..

 இங்கிருக்கும் அனைவருக்கும் நான் இன்று டின்னர் தருகிறேன்... சாப்பிடலாம் வாங்க..." என்றார்... அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி.. அனைவரும் ஒரே சமயத்தில் ஹேப்பி நியூ இயர் என்றனர்...

 

        வெளியே இருந்த திடலில் அனவருக்கும் பார்ட்டி.. உள்ளே பத்து குடும்பத்தை மட்டுமே அனுமதித்து இருந்தார்கள். அதில் ரவிக்குமார் குடும்பம் பத்து...

சூப்பர் ஸ்டாருடன் நவீனும் ரன்ஜித்தும் செல்ஃ பி எடுத்துக் கொண்டனர்..

அவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கியது...

ரவிக்குமாரும் சுமதியும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.. அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன..

மணி பன்னிரென்டு அடிக்க "ஹேப்பு நியூ இயர்.."

அனைவரும் ஒரே சமயத்தில் சொல்ல அரங்கம் அதிர்ந்தது...

 

 - துரை சேகர்

    கோவை.