ஆயிரமாயிரம்
நன்றிகள்
சொல்லலாம்...
ஆயிரமாயிரம்
மனிதர்க்கு
சொல்லலாம்...
சிறு உதவி
செய்தோர்க்கும்
பேருதவி
செய்தோர்க்கும்
சமயங்களில்
துரோகங்கள்
செய்தோர்க்கும்...
உச்சந்தலை
முதல்
உள்ளங்கால்
வரையில்
இடைவிடாது
சீராய்
இயங்கும்
என்
உடலுக்கும்
உள்ளத்திற்கும்...
தன்னை
மறந்து
தன் வீட்டை
மறந்து
தாய் நாட்டுக்கு
உண்மையாய்
உழைத்த
உத்தமர்க்கும்...
பாமர
மனிதர்க்காக
பாரையே
படைத்த
கடவுளையே
தகர்த்த
தலைவன்
தந்தை பெரியாருக்கும்...
தன்னை
முற்றிலுமாய்
வஞ்சித்த போதும்
மனிதர்க்கு
முடிந்தவரை
கொடைகள்
கொடுக்கும்
இயற்கைக்கும்...
வியக்கத்தக்க
விஞ்ஞானங்களை
மனித குலத்துக்கு
அருளிய
விஞ்ஞானிகளுக்கும்...
இல்லாத
கடவுளை
தேடும்
இருக்கும்
மனிதர்களுக்கு
மெய் ஞானத்தை
போதித்த
மகான்களுக்கும்..
அல்லல்
கொடுத்தோர்க்கும்
எள்ளல்
செய்தோர்க்கும்...
நன்றி
சொல்ல
ஆரம்பித்தால்
என்
பட்டியல்
என்
கவிதைகள்
போலவே
அளவுகடந்து
நீநீநீநீளும்...
தீராவே
தீராது
ஒவ்வொரு
நாளும்...
நிறைவாய்
நன்றியை
கண்டு
பிடித்தவர்க்கும்
அதை
இன்று வரை
'கண்டு'
கொள்வோருக்கும்
கண்டு
கொண்டாடுவோருக்கும்
மறவாது
நன்றி சொல்கிறேன்...
நாளும் நன்றி சொல்லும்...
-ஆறுமுகம் நாகப்பன்