tamilnadu epaper

ஹைக்கூ

ஹைக்கூ


பசித்த வயிற்றோடு தினந்தோறும் வருகிறது.  

வானில் நிலா


அழும் குழந்தை 

சோறூட்டுகிறாள் அம்மா நிலவை காட்டி


வானில் நிலா உணவூட்டியும் வளரவே இல்லை 

குழந்தை 


வான் நிலா 

கொஞ்சமாக வளர்கிறது 

கருவில் குழந்தை 


வானவில் 

நிறபேதம் பிடிக்கவில்லை 

நிமிடத்தில் மறைகிறது 


தாய் மழை 

தந்தை வெயில் 

குழந்தை வானவில் 


-புஷ்பா குமார் 

திருப்போரூர்