tamilnadu epaper

நியாயம் எங்கே?

நியாயம் எங்கே?


சுந்தர் படபடப்பாக வீட்டில் நுழைந்தார்.

அவரைப் பார்த்த கல்யாணி, “என்னாச்சு, ஏன் இப்படி வரீங்க?” என ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“மளிகை கடையில் நான் வாங்கியது 50 ரூபாய்க்கு, ஆனால் செலுத்தியது 80 ரூபாய்க்கு. இந்த 30 ரூபாய் ஏன் அதிகம் செலுத்தினேன் என்று யோசித்துக் கொண்டே வந்தேன்,” என்றார்.


“அங்கேயே அந்த கணக்கை கேட்டிருக்கலாமே?” என்ற கல்யாணி,

“கூட்டம் அதிகமாக இருந்ததால், கேட்க முடியவில்லை கடைக்காரரும் பரபரப்பாக இருந்தார். அதனால் யோசித்துக் கொண்டே வந்து விட்டேன் ” என்றார் சுந்தர்.


அவரது மனஅமைதியை இழந்தது கண்டு கவலைப்பட்ட கல்யாணி, அதை தவிர்க்க உதவ முயன்றாள்.


அடுத்த நாள், சுந்தர் மகிழ்ச்சியுடன் சொன்னார்:

“என் அக்கவுண்டுக்கு யாரோ 500 ரூபாய் கிரெடிட் பண்ணி இருக்காங்க!”


“நேத்து 30 ரூபாய்க்கு இவ்வளவு மனசு படபடன்னு இருந்தீங்க, இப்போ பாருங்க – கடவுள் 500 ரூபாய் குடுத்துட்டாரே!” என்றாள் கல்யாணி சிரித்தபடி.


கல்யாணி தனது தோழியின் உதவியுடன் அந்த 500 ரூபாயை சுந்தரின் கணக்கில் தெரியாத ஒரு நபரின் படம் போல செலுத்த சொல்லியிருந்தாள். அதன்பின் சுந்தர் அமைதி அடைந்தார்.


மறுநாள், அலுவலகத்தில் இருந்த சுந்தர் கல்யாணியை அழைத்தார்:

“500 ரூபாய் தவறுதலாக அனுப்பியவர் யார் என்று கண்டுபிடிச்சுட்டேன். டிரான்சக்ஷன் ஐடியை வைத்து நண்பர் ஒருவரிடம் சொல்லி கண்டுபிடித்தேன். அவர்களே ஒத்துக்கொண்டனர். உடனே பணத்தை திருப்பி அனுப்பினேன். இப்போ தான் மனசுக்கு நிம்மதி,” என்றார்.


சுந்தர் தனது நேர்மையையும் நியாய உணர்வையும், கல்யாணியின் உள்ளத்தில் பெருமை நிரப்பின.

 சுந்தர் கவலைப்படுவது பணத்துக்காக அல்ல, நியாயம் பறிக்கப்படக் கூடாது என்பதற்காக தான் என்பதை உணர்ந்ததும் பெருமை கொண்டாள் கல்யாணி

_____

-ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி