தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் கிள்ளிகுளம் வ.உ.சி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2025 கல்வியாண்டில் பயிலும் இளங்கலை இறுதி ஆண்டு மாணவிகள், திவிஜா, ஹேமாவதி, கிஷோபா, பூஜா, பிரபாவதி, பிரதீபா ,ராஜபிரியா, ரஞ்சிதா, சுவேதா ஆகியோர் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவம் பெற்று வருகின்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் தேரடிமணி தலைமையில் பேராசிரியர்கள் காளிராஜன், ஆறுமுகசாமி, கவிதா புஷ்பம்,ஆகியோரின் வழிகாட்டுதலின் பெயரில் சிவகிரி வட்டத்தில் கரும்பு சாகுபடியில் புதிய தொழில்நுட்பமான செம்மை கரும்பு சாகுபடி உறுதிப்படுத்தும் நோக்கில், வேளாண் மாணவர்கள் சமீபத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்வில், ஒற்றை நாற்று முறை , அதிக இடைவெளி , ஊடுபயிர் முறை,இயற்கை உரங்கள் பயன்பாடு, நீர் மேலாண்மை, மண் நிலைத்தன்மை பாதுகாப்பு, மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு பயிர் விளைச்சலை மேம்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.