ஹைக்கூ கவிதைகள்.
ஆசிரியர் :- செ.புதூர். எல்.ரவி.
வெளியீடு:-" />
நூல் :- "வீதிக்கு வந்த விசாரணைகள்." ஹைக்கூ கவிதைகள். ஆசிரியர் :- செ.புதூர். எல்.ரவி. வெளியீடு:- தமிழகம். 1/84 தெற்குத் தெரு. புதூர் அஞ்சல். செல் :-9952113194. நூல் விமர்சகர் :குடந்தை பரிபூரணன். =============== காலத்தால் முந்தியது தமிழ்.கவிதையால் முந்தியது இலக்கியம். புலவர்கள் தம் செல்லப் பிள்ளையாக வைத்திருந்த செய்யுள் செல்வங்களைஎல்லாம் அவர்களிட மிருந்து எடுத்து வந்த பாரதி தன் கவித்துவத்தால் அவைகளை நவீனத்துவப் படுத்தி எளிமையாக்கி "சொல் புதிது பொருள் புதிது"என்று புதுக் கவிதைக்கும் வித்தூன்றி விட்டு சென்று விட்டார். புதுக்கவிதை யும் பற்பல பரிமாணங்களில் தன் கிளைகளை விரித்து ஹைக்கூ என்னும் கனியில் எல்லோராலும் விரும்பிப் படிக்கப் படுகின்ற ஒருவாசிப்பு அனுபவத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. எல் ரவி அவர்களும் அந்த அனுபவதில் திளைத்துப் போய் தன்னுடைய கண்களை உறுத்தும் சமுதாயப் கோணல்களைஎல்லாம் வீதிக்கு இழுத்து வந்து விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார். இலக்கிய இதழ்கள் மூலம் பலராலும் நன்கு அறியப்பட்ட வரான எல். ரவி. அவர்கள் புதுக் கவிதைகளில் இந்த நூலின் வாயிலாகத் தனது கை வண்ணத்தை மெருகு படுத்தியிருக்கிறார். கவித் திலகம் "வெற்றிப் பேரொளி"அவர்களின் அணிந்துரையும், முனைவரும் இலக்கியப் படைப்பாளியு மான இடை மருதூர் கி. மஞ்சுளா அவர்களின் வாழ்த்துரையுமே இதற்கு சான்று பகர் கின்றன. ஆசிரியரின் பொதுவுடைமைப் பார்வையில், "ஒன்றுமில்லை உடுத்துவதற்கு ஜன்னல் ரவிக்கை" என்னும் கவிதை சமூக ஏற்றத் தாழ்வை இடித்துக் காட்டுகிறது. "ஆலமரத்து சாமிகள் அமைதியானதால் ஆசிரம சாமிகளின் பை நிறைந்தது "என்று போலி சாமிகள் விசாரணைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளர்கள். "புல்லின் தலையில் வெள்ளிக் கிரீடம் பனித் துளிகள் "என்னும் கவிதை நுட்பமான அவரது கவித்துவப் பார்வைக்கு ஓர் எடுத்துக் காட்டு. வீதிக்கு வந்த விசாரணைகள் என்ற தலைப்பைத் தாங்கிப் பிடிக்கும் கவிதைகள் இந்த நூலில் ஐந்து இடம் பெற்றுள்ளன. மூன்று கவிதைகள் அரசியல் சார்ந்தவை. சாத்தான் குளம் கொலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, தேர்தல் பத்திரத்தில் தில்லுமுல்லு கள் ஆகியன குறிப்பிடத் தக்கவை.மற்ற இரண்டும் சமூகம் சார்ந்தவை. எழுதப் படுவன எல்லாம் கவிதைகள் ஆகா. உணரப் படுபவையே கவிதைகள் ஆகின்றன என்னும் கூற்றுக்கு இணங்க எல்லாக் கவிதைகளும் இயல்பான ஓரிழையில் எளிமையாக நெய்யப்படுள்ளன. இன்றைய கால கட்டத்திற் கேற்ப அரசியல், ஊழல், ஆகியன குறித்தும் சில கவிதைகள் உள்ளன. உழ வுத் தொழிலின் மகிமை, வறுமையின் கொடுமை, செயற்கை கருத்தரிப்பு முதியோர் காப்பகம் இயற்கை வளங்களின் அழிவு, என்று பல தள ங்களிலும் தனது கூர்மையான பார்வையை பாய்ச்சியிருக்கும் செ. புதூர் எல். ரவி அவர்கள் ஐந்து நூல்களின் ஆசிரியர். ஆறு விருதுகளுக்கு ஆசாரியர். ஒயிவு பெற்ற தமிழ் ஆசிரியர். தமிழக அரசின் "அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்" என்னும் விருதுக்கு சொந்தக்காரர். "வீதிக்கு வந்த விசாரணைகள்" என்னும் இந்த நூலில் உள்ள கவிதைகள் தமிழ்ப் பாடநூலில் சேர்த்துக் கொள்ளும் தகுதி வாய்ந் தவை என்று துணிந்து கூறலாம். நூலாய்வு : குடந்தை பரிபூரணன். =============== Breaking News:
நூல் அறிமுகம்.