கோடை விடுமுறை முடிந்து அன்றுதான் பள்ளி த் திறக்கப் பட்டது.
அது அரசுப் பள்ளி என்பதால் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, மாணவர்கள் அமரும் பெஞ்ச் மற்றும் மேஜைகள் சீர்செய்யப்பட்டு பள்ளிக் கட்டடம் முழுவதும் புதிய வண்ணம் பூசப்பட்ட நிலையில் மாணவர்கள் தங்களுக்கான வகுப்பறைக்குள் அமர்ந்திருந்தனர்.
ஆண்டுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று முந்தைய வகுப்பிலிருந்து புதிய வகுப்பிற்குள் வந்துள்ளதால் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
5-ம் வகுப்பிலிருந்து 6-ம் வகுப்பிற்கு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் தங்களது புதிய வகுப்பு ஆசிரியரின் வருகைக்காக காத்திருந்தனர்.
ஆசிரியர் கற்பகம் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று இருகரம் கூப்பி வணக்கம் டீச்சர் என்றனர்.பதிலுக்கு ஆசிரியர் கற்பகம் கும் வணக்கம்! எல்லோரும் உட்காருங்கள் என்றார்.
வகுப்பறை அமைதியான சூழலுக்கு தள்ளப்பட்டது.ஆசிரியர் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தில் மாணவர்கள் காத்திருந்தனர்.
நீங்க அனைவரும் 5-ம் வகுப்பிலிருந்து தேர்ச்சிப் பெற்று 6-ம் வகுப்புக்கு வந்துள்ளீர்கள்.உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இதேபோன்று நீங்கள் அனைவரும் நன்றாக படித்து,6-ம் வகுப்பிலிருந்து 7-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்!
புதிதாக இந்த வகுப்பிற்குள் வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் ஒரு போட்டி ஒன்று நடத்தப் போகிறேன்.
அதுல ஒருத்தருக்கு நான் ஒரு பரிசுத் தரப்போறேன்.
போட்டி என்னன்னா நீங்க எல்லாரும் உங்களுக்கு கிடைத்த கோடை விடுமுறையை எப்படி பயனுள்ளதாக செலவழித்தீர்கள் என்பதை ஒவ்வொருத்தரும் சுருக்கமா சொல்லணும். அதுல கோடை விடுமுறையை சிறப்பாக பயன்படுத்திய ஒரு மாணவரை தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்கப் போறேன். சரி போட்டியை ஆரம்பிப்போமா !முதல் பெஞ்சிலிருந்து வரிசையாக வாங்க. உங்க பேரை சொல்லிட்டு உங்க கோடை விடுமுறையை பற்றி சொல்ல ஆரம்பிங்க ....என் பெயர் முத்துக்குமார் நான் கோடை விடுமுறைக்கு எனது மாமா வீட்டுக்கு மதுரைக்கு போய் இருந்தேன் அங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பார்த்து வந்தேன் டீச்சர் வணக்கம் என் பெயர் கணபதி ராமன் என்னுடைய கோடை விடுமுறையை என் பெற்றோர்களிடம் ஊட்டிக்கு ஒரு ஒரு வாரம் சென்று வந்தேன் .மலர் கண்காட்சியை கண்டு ரசித்தேன் ஊட்டி மலையின் அழகை பார்த்து ரசித்தேன் என்றான் இப்படியாக மாணவர்கள் சொல்லி முடித்ததும் மாணவியின் வரிசையில் வைதேகி தனது கோடை விடுமுறையை நூலகத்திற்கு சென்று நூல்கள் வாசித்ததையும் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்ததையும் அதன் மூலமாக தனது ஆடைகளை தானே துவைக்க கற்றுக் கொண்டதையும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதையும் அறிந்து கொண்டதாக தெரிவித்தார் வீட்டுத்தோட்டம் அமைத்து பராமரித்தல் இப்படியான அந்த வேலைகளை அனைத்தும் நான் தெரிந்து கொண்டேன் என்று மாணவர்கள் அனைவரும் தங்களது கோடை விடுமுறை அனுபவத்தை தெரிவித்தனர் வகுப்பறையில் மீண்டும் நிஜப்தம் நிலவியது ஆசிரியர் கற்பகம் மாணவர்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் கோடை விடுமுறையை எப்படி அனுபவித்தோம் என்று தெரிவித்தீர்கள். எல்லோரும் சிறப்பாகவே கழித்து உள்ளீர்கள் ஆனால் பயனுள்ளதாக கழித்த மாணவி வைதேகிக்குத்தான் எனது பரிசு கிடைக்கப்போகிறது. அவர்தான் கோடை விடுமுறையில் தனது அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்து தானும் அந்த வேலைகளை கற்றுக் கொண்டதாகவும் நூலகத்திற்கு சென்று செய்தித்தாள் மற்றும் புத்தகங்களை படித்ததாகவும் வீட்டுத்தோட்டம்அமைத்து பராமரித்ததாகவும் தெரிவித்துள்ளார் எனவே வைதேகி மட்டும் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழித்துள்ளதால் அவருக்கு பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு என்ற புத்தகத்தை பரிசாக தருகிறேன். மாணவர்கள் அனைவரும் அவருக்கு தங்களது வாழ்த்தினை கரவொலி மூலம் தெரிவிக்கலாம் என்று சொன்னதும் மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொளி எழுப்பினர். அவர்களின் கரவொலியால் வகுப்பறையே அதிர்ந்தது.
ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்