காஷ்மீரில் பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஜாதி, மத, இன, மொழி, அரசியல்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு
ஒட்டுமொத்த இந்திய மக்களின் பேராதரவுடன்
பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நம்முடைய இந்திய அரசு பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதை வரவேற்று பாரத் முன்னணி அமைப்பின் தலைவர் கே.எஸ்.சிவாஜி அவர்கள் இன்று 07.05.2025 பகல் 12 மணிக்கு சென்னை, தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். உடன் பாரத் முன்னணி மாநில அமைப்பு செயலாளர் எம்.எஸ்.ஆர்.காந்தி, வட சென்னை மாவட்ட தலைவர் நெல்லை சக்திவேல், மாவட்டச் செயலாளர் ரஜினி பாபு, மாவட்ட நிர்வாகிகள் சந்திரகலா, பாஸ்கர் மற்றும் மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.