இப்பத்தான் ஆண்ட்டி" />

tamilnadu epaper

பார்க்காதே

பார்க்காதே

சோபாவில் அமர்ந்தபடி

செல்லைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் பிரேம்குமாரை அவனுக்கே தெரியாமல் பின்பக்கமாய் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா. திடீரென நிமிர்ந்து பார்த்த பிரேம்குமார் அதிர்ந்து போனான்."அம்மா!

இப்பத்தான் ஆண்ட்டி வீட்டுக்கு வந்தேன்."என்று கூறியபடியே அவர்கள் வீட்டுக்கு ஓடினான் அவன்.

 

          சத்யாவைப் பொறுத்த வரையில் பள்ளிக்கூடம் விட்டதும்

சிறிது நேரம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடியதும் அவன்

படிக்க ஆரம்பித்து விட வேண்டும்.

மிகவும் கண்டிப்பானவள். செல்போனால்தான் பிள்ளைகளின் படிப்பு பாழாகிறது என்பது அவளது கருத்து. 

 

           பிரேம்குமார் எவ்வளவு கெஞ்சினாலும் செல்லை மட்டும் தரவே மாட்டாள். அதற்காகவே 

விளையாடுவதாக சொல்லி விட்டு

பக்கத்து வீட்டு ஆன்ட்டி வீட்டுக்கு

அவளுக்குத் தெரியாமல் நைஸாக வந்து விடுவான். போன் சார்ஜில் இருந்தாலும் அதை எடுத்து விட்டு

பார்க்கும் அளவுக்கு அவனுக்கு அங்கே செல்வாக்கு உண்டு.

 

         அன்று ரொம்ப நேரம் அவன் ஆள் இல்லாமல் போகவே ஆன்ட்டி வீட்டுக்கே வந்து விட்டாள் சத்யா.

செல்லுடன் அவன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் பத்ரகாளியாகி விட்டாள். " உன்னை யாருடா இங்க வரச் சொன்னது?

செல்லைப் பார்க்காதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது? நான் கத்தறது உன் காதுல விழுதா இல்லையா?" என்று

கண்ட மேனிக்கு திட்டித் தீர்த்து விட்டாள்.

 

       அழும் நிலைக்கு வந்து விட்ட பிரேம்குமார் "அம்மா! இந்த செல்லுல திடீர் திடீர்னு அசிங்க

அசிங்கமான படங்கள் வர்ரதைப்பார்த்து நான் கெட்டுப் போயிட்டா என்ன பண்றதுன்னுதானே பயப்படுறே?

நான் அதையெல்லாம் பார்க்கிறதே

இல்லைம்மா! கேம் ஒண்ணை மட்டும்தான் பார்த்து விளையாடுவேன்" என்றான் 

அப்பாவியாக.

 

    அசந்து போனாள் சத்யா.

 

 

மு.மதிவாணன்

வெற்றி இல்லம்

குபேந்திரன் நகர்

அரூர் 636903