ஊரெங்கும் இதே பேச்சு தான்!
தர்பூசணியின் சிவப்பு நிறத்திற்காக ஊசி மூலம் கலர் ஏற்றப்படுகிறதென்று.
இந்த வதந்தி
கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி தர்பூசணி வியாபா
ரத்தைப் பாதிக்க ஆரம்பித்தது.
இன்னும் சில நாட்கள் கழித்து மொத்தமாக தர்பூசணி வாங்கும் மொத்த வியாபாரிகள்
வாங்கும் அளவைக் குறைக்க ஆரம்பித்தனர்.
தர்பூசணியை சிவப்பாக்க கலர் சாயம் செலுத்தும் செய்தி காட்டுத்தீ போலப் பரவியதால் பயந்து போய் பொதுமக்கள் மேல்நாட்டு குளிர்பானங்களை வாங்கக் குவிந்தனர்.
இதைப் பயன்படுத்தி மார்க்கெட்டில் குளிர்பானங்களின் விலை ஏறத் துவங்கியது.
பழங்கள், மோர், இளநீர், பதநீர் இவற்றைக் குறைத்துக் கொண்டு பிராண்டட் ஜூஸ் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்
பொதுமக்கள்.
இதனால் கார்ப்பரேட் கம்பெனிகள் கல்லா கட்டினார்களோ
இந்த கோடை காலத்தில் தர்பூசணி பற்றாக்குறை வருமேயொழிய வியாயாரத்தை ஒருநாளும் பாதித்ததில்லை.
தர்பூசணி வியாபாரிகள் இந்த இரண்டு மாதங்களில் நல்ல வருமானம் பார்த்து விடுவார்கள். இப்போது வாங்கிய கடனை அடைப்பதற்கே அல்லாடும் நிலை!
இதே நிலை நீடித்தால் நிலைமை படு மோசமாகி விடும் என உணர்ந்த தர்பூசணி வியாபாரிகள் ஒன்று சேர்ந்து மீடியாவுக்கு விளக்கம் கொடுக்கத் தயாரானார்கள்.