tamilnadu epaper

வாசகர் கடிதம் (அரும்பூர்.க.குமாரகுரு)-24.04.25

வாசகர் கடிதம் (அரும்பூர்.க.குமாரகுரு)-24.04.25

எழுத்தாளர் பொட்டல்புதூர் நெல்லைக்குரலோன் அவர்கள் எழுதிய பயணங்கள் முடிவதில்லை பகுதி 'சிங்கப்பூர் பயணம்' கட்டுரை படித்தேன். கல்கி இதழ் போட்டியில் வென்று குதூகலமடைந்து.. அந்த அறிவிப்பு இதழிலேயே வெளியான ஒரு சிறுகதையின் பாதிப்பில் பயணச்செலவுத் தொகையில் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவ நினைத்து..முடியாமல் போனது.. அரைமனதோடு சிங்கப்பூர் சென்று முதல்நாளிலேயே கைப்பை தொலைந்து..பாஸ்போர்ட் கிடைக்குமா என்ற தவிப்பில் நின்றது.. பின் கிடைத்தது..பிறகு பயணம் சிறப்பாக நிறைவேறி கல்கி இதழில் அட்டைப்பட பயணக்கட்டுரை எழுதியது என பலத் திருப்பங்கள் நிறைந்த சிறுகதையாக பரிணமித்தது பயணக்கட்டுரை.அருமை.!* -------


-அரும்பூர்.க.குமாரகுரு,

மயிலாடுதுறை