ஏனோ தெரியவில்லை
ஓவியமாய் விரும்பினேன்
ஓவியமே
வெறுக்கிறேன்
இரண்டுக்கும்
நடுவில்
எதுவும் புரியாமல்
புதிய ஞானத்தில்
புத்தனாய்
அமர்ந்திட
போதிமரமாய்
நீ நின்றால்
விரும்பிடவா
வெறுத்திடவா
முடிவு தெரியாமல்
முடித்து விட்டேன்
என்றாலும்
முற்றுப் புள்ளி வைக்க
ஏனோ
மறந்து போனேன்....
