புத்தகம் வாசிப்பதும்
நேசிப்பதும் நன்றாம்
நன்றாம் கற்றதை
எடுத்துச் சொல்லுதல்
சொல்லுதல் யாவர்க்கும்
புரிதல் சிறப்பு
சிறப்பு செய்யும்
நூல்களின் உயிர்ப்பு
உயிர்ப்பும் உணர்வும்
உண்மை உரைக்கும்
உரைக்கும் எழுத்தும்
உறவினை வளர்க்கும்
வளர்க்கும் தன்மை
கேள்வியின் ஞானம்
ஞானம் தந்திடும்
படிக்கும் புத்தகம்.
-தாராமதன்