வாழ்க்கைப் பயணம் என்னும் நெடுஞ்சாலையில்
வேகமாய் விரையும் வாகனங்களுக்கு
ஓரமாய்
ஒதுங்கி வழி விட்டே
ஒப்புக்கு ஓடும் வாகனங்கள்!
உழைப்புக்கும் நம்பிக்கைக்கும்
காலமிடும்
கைவிலங்கு!
தவிக்கும்படி வாழ நேர்ந்தாலும்
தவிர்க்க இயலாத வாழ்க்கைப் பருவம்!
இளமை தேசத்தின்
இறுதி எல்லைகள்!!
காலனின் சம்ராஜ்யத்திற்குள்
பிரவேசிக்க் கடவுள் அமைத்த வாசற்படி!
அறியாத வயதில் புரியாமல் செய்த
சிறுபெரும்
பிழைகளையே
அறிந்துணர்ந்து
திருந்த இயற்கை
தரும் அரிய வாய்ப்பு!
இனியேதும் உண்டோ முதுமையின் விளக்கத்திற்கு!
-அன்புடன்
ரேணுகா