அகத்தினைப் புதுப்பிக்கும் ஆயுதமே... புத்தகம்...
ஆராய்ச்சிக்கும் ஆர்வத்திற்கும்... வித்திடும் விதையே.... புத்தகம்
இருண்ட மனதிற்குள் ஒளி விளக்கேற்றும்..தீபமே... புத்தகம்..
பழையன வற்றில் ஊறித்திளைப்போரை... புத்தாக்கம் செய்யும் அறிவுச் சுடரே... புத்தகம்...
வெற்றுக் காகிதங்கள் அல்ல...வெற்றிக்கான வேதங்களே.. புத்தகங்கள்...
அறிஞர்... புலவர்... யாவர்க்கும்....திசை காட்டி... புத்தகங்கள்...
அறியாமையைப் போக்கும்... கலங்கரை விளக்கம்.... புத்தகம்...
புரட்டுவது பக்கங்கள் மட்டுமே அல்ல...
முன்னேற்றத்திற்கான... தடைகளையும் தான்...
புத்தக வாசிப்பில்.. மூழ்கிப் போனவர்கள் தான்...இச்மூகத்தை... வளர்ச்சிப் பாதையில் மேலெழும்ப வைத்தவர்கள்...
வீட்டிற்கோர் புத்தக சாலை... என்றார்.. அண்ணா...
அருகில் வேண்டும் நூலகம்.. என்றார்... அம்பேத்கர்...
தனிமையை வெற்றி கொண்டேன்..புத்தகங்களுடன்... என்றார்.. ஜெயலலிதா...
வாசிப்பு குறைந்து சிக்கலில் வீழ்கிறது.. உலகம்...
அடிமைத்தனத்திற்கு எதிராய் புத்தகங்கள் செய்தன... கலகம்...
விடுதலைப் போரின் வேராய் ...விளங்கி நின்றவைப் புத்தகங்கள்...
வாசிப்பை நேசிப்போம்...
புத்தகங்களுடன் வசிப்போம்..
-தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி