tamilnadu epaper

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காவல்துறை சார்பில் பட்டமராத்தான் கோவில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதியில் காவல்துறை சார்பில் பட்டமராத்தான் கோவில் பூச்சொரிதல் விழா

மே.07

புதுக்கோட்டை மாவட்டம்

பொன்னமராவதியில் காவல்துறை சார்பில் பட்டமராத்தான் கோவில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பட்டமரத்தான் கோவில் 65-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது.மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடந்த காவல்துறை சார்பிலான பூத்திருவிழா காவல் துணைக்கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் 

சிவன் கோவிலில் இருந்து 

வான வேடிக்கை,மேளதாளங்கள் முழங்க காவல் ஆய்வாளர் பத்மா, உதவி ஆய்வாளர் பூவரசன், காவலர்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்துச்சென்று பட்டமரத்தான் சுவாமிக்கு செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து காவல்துறை சார்பில் காவல் துணைக்கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. இதில் காவலர்களின் குடும்பத்தினர்,பொதுமக்கள் என 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.