திருக்குறள் இனிமை தேன் உரை என்கிற நூலை ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழன்னை விருத்தாளர் தி. கு செல்வமணி அவர்கள் எழுதி உள்ளார்..
திருக்குறள் ஒரு சுரங்கம். பலருக்கும் பலவகையில் பயன்படும் சிறந்த நூல். தமிழ்நாட்டினர் மட்டுமின்றி பிற நாட்டினராலும் சிறந்த நூல் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஒப்பில்லா
திருக்குறள் இன்றைய சமுதாயத்துக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது.
திருக்குறள் உலகப் பொதுமறை நூலாக திகழ்கிறது அதற்கு பலர் உரை எழுதி இருப்பினும் தமிழ் ஆசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கும் அனுபவத்தில் இனிமை தேன் உரையை தந்திருக்கிறார் ஆசிரியர். . இரண்டு அடி கொண்ட திருக்குறளுக்கு ஒரே வரியில் விளக்க உரை எழுதி வாசிப்பவர்களை வியப்பில் ஆழ்த்து இருக்கிறார் ஆசிரியர் தமிழ் மாமணி தி கு செல்வமணி அவர்கள். . மாணவ செல்வங்களுக்கு இந்த புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் படிப்பதற்கு எளிதாகவும் பொருள் உணர்ந்து கொள்வதற்கு வசதியாகவும் இருக்கிறது என்பது தனி சிறப்பு. .
சிந்தனைத் துளிகள் என்கிற புத்தகத்தை எழுதி நமக்கு தந்திருக்கும் இவர் அழகு தமிழில் எளிய தமிழில் விளக்க உரைகளை தந்திருக்கின்ற போது வாசிப்பவர் உள்ளங்களை வசீகரிக்கிறது மகிழ்விக்கிறது. .
1330 குரலுக்கும் மிக சிறப்பான ஒரு வரி உரையை எழுதியிருக்கும் இந்த புத்தகம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்கிற குரலுக்கு தமிழில் முதல் எழுத்து ஆ அது போல உலகத்திற்கு முதன்மையானவர் கடவுள் என்று விளக்கம் அளித்திருக்கிறார். தானம் தவம் இரண்டும் தங்க வியர் உலகம் வானம் வழங்காது எனின் என்கிற குறட்பாவுக்கு மழை பெய்யாவிட்டால் தானம் தவம் இரண்டும் இல்லை என்று பொருள் எழுதி இருக்கிறார். .
அருண் எனப்பட்டதே இல்வாழ்க்கை அங்கும் திறன் பழிப்பது இல்லாயின் நன்று என்கிற குரலுக்கு வழியில்லாத இல்லறமே சாலச்சிறந்தது என்று உரை எழுதியிருக்கிறார். . இப்படி எளிய உரைகளால் இனி வைத்தேன் முறையாக தேடுகின்ற இந்த புத்தகம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.
இந்த புத்தகம் கிடைக்கும் இடம்.
நந்தினி பதிப்பகம் 117 பைபாஸ் சாலை திருவண்ணாமலை
60 6601
9843823777
விலை 150. 184 பக்கங்கள்.
விமர்சனம்
-ந. சண்முகம்
திருவண்ணாமலை.