Breaking News:
tamilnadu epaper

புத்தக வெளியீட்டு விழா ஒரு சாதனை.

புத்தக வெளியீட்டு   விழா ஒரு சாதனை.


      மார்ச் 17, 2025, அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்

பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் 

சாதனை படைத்த புத்தக வெளியீட்டு விழா இனிதாக நடைபெற்றது.


திரு ராதாகிருஷ்ணன் IAS திருமதி பாமதி IAS ( retd), முனைவர் நடராஜன் IRS, 

முனைவர் சரண்யா ஜயகுமார்,

திரு. புருஷோத்தமன், சூரியா மேடம், 

கிறிஸ்டி எலினா- ஹாக்கி பிளேயர், திரு சுப்ரமணியம்  கரெஸ்பாண்டன்ட் SRM பள்ளி,

திருமதி வேதா கோபாலன் எழுத்தாளர், திருமதி சாந்தி ஜெகத்ரட்சகன் (பொதிகை செய்தி தொகுப்பாளர்)  முனைவர். ஸ்ரீதேவி அருணாச்சலம், Indo UAE  Chamber -, நிறுவனர், ஜானட் ப்ரீதி  ( voice trust) ஆகிய சான்றோர் கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். அவர்களை துணை நிறுவனர் உமா கௌவரவித்தார். 


106 ற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் 115க்கும் மேற்பட்ட  புத்தகங்கள் வெளியிடப்பட்டது. 


பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், தலைமை செயலாளர் முனைவர் ர.லஷ்மி ப்ரியா தன்னுடைய வரவேற்பு உரையில் விரிவாக தான் அந்த நிறுவனத்தை ஏன், எப்படி எதற்கு நிறுவினார் இன்று  விளக்கினார்.

தன்னுடைய எதிர்கால திட்டத்தையும் அழகாக  எடுத்துரைத்தார்.


' ரகசியம்',  'திருக்குறள் இன் காமிக்ஸ்',

'சிகரத்தில் ஆன்மீகமும் ஆளுமையும்'

என்ற புத்தகங்களும்  சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்டது.


லஷ்மி ப்ரியா எழுதிய ' ரகசியம்' எனற புத்தகத்தை வெளியிட்டது

மட்டுமின்றி அதன் சாரத்தை அழகாக விளக்கினார்,முனைவர் நடராஜன் IRS அவர்கள்.



' எதிர்காலத்தில் கலை, இலக்கியத்தின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி இடம் பெற்றது  தனிச்சிறப்பு.



கலந்துரையாடலில் கலந்துக் கொண்ட திருமதி பாமதி, திருமதி. சாந்தி, முனைவர் சரண்யா ஜயகுமார் ஆகியோர் அழகாக

தொழில்நுட்பத்தின்  ஆளுமை,

கலாச்சாரம்,படைப்பாற்றல் ( creativity)

இவற்றிற்க்கு   எவ்வளவு பாதகம் / சாதகமாக  இருக்கும்  என்று

பேசினார்கள். இந்தக் கலந்துரையாடலை முனைவர் திரு. அப்துல் முகமது அலி   ஜின்னா,  இணை பேராசிரியர்,  ஜமால் முகமது கல்லூரி,அழகாகத் தன் கேள்விகளால் 

 வழி நடத்திச் சென்றார்.


பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்துடன் ஆன  தன்  பயணத்தை அழகாக எடுத்துரைத்தார், திருமதி வேதா கோபாலன்.


தன் பங்களிப்பை அளித்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் 

சான்றிதழ், மெடல்  அளிக்கப்பட்டு

கௌரவிக்கப் பட்டனர்.



பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர்களான ஹரிதாரிணி CHO, ஹர்ஷா  போட்டோக்ராபர், பத்மா S.V CMO, உஷா கண்ணன்  CCO, வனஜா முத்துகிருஷ்ணன் SMM, ருக்மணி வெங்கட்ராமன், CCO  ஆகியோர் தங்கள் பங்களிப்பை அளித்து  விழா  சிறப்பிக்க

 உதவினார்கள்.


உமா அபர்ணா,துணை இயக்குனர், பேக்கிடெர்ம் டேல்ஸ், COO  அவர்களின்

நன்றி நவிலல்களுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.