tamilnadu epaper

புள்ளிக்கு முற்றுப்புள்ளி

புள்ளிக்கு முற்றுப்புள்ளி


கருப்பு வெள்ளை

காளை மாடு

கம்பீரமானவை...


டால்மேஷனின்

கறுப்பு புள்ளிகள் 

கவர்ச்சியாவை...


புள்ளி மானின்

வெள்ளை புள்ளிகள்

அழகானவை...


சிறுத்தையின்

புள்ளிகள் 

பளப்பானவை...


கோலப்புள்ளிகள் 

கண்களைப்

பறிப்பவை...


மனித உடலின்

வெண் புள்ளிகள்

அவர்

உடலில் மட்டும் 

தொற்றும்...

உடல் முழுக்க

பற்றும்...


இந்த புள்ளிகள்

மட்டும் 

பரிதாபத்துக்குரியவை...


இவை

தொடரும்

தொற்று நோய் 

அல்ல அது...


அவர்களிடம்...


நமது

மாசற்ற

'பாச'க்கயிற்றை

வீசுவோம்...


நேசக்கரத்தை

நீட்டுவோம்...


-ஆறுமுகம் நாகப்பன்