கத்தோலிக தலைமை மதகுரு போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு என்று சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ள விஷயங்கள் என்னென்ன...
போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது சிறுநீரகங்கள் லேசான பாதிப்புக்குள்ளாகியிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை(பிப். 23) மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை(பிப். 25) நிலவரப்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இரவு முழுவதும் நன்றாக தூங்கி ஓய்வெடுத்ததாகவும் மருத்துவமனை அறையில் இருந்தபடியே தமது தேவாலய பணிகளை மேற்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டி வாடிகன் சதுக்கத்தில் திங்கள்கிழமை(பிப். 24) மாலை திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கடுங்குளிரையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவில் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இதனிடையே, தமது உடல்நிலை நலிவுற்றிருப்பதையடுத்து, தனக்குப்பின் அடுத்த போப்பை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை முடுக்கிவிட போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியிருப்பதாக வாடிகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போப் பிரான்சிஸ் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போப் உடல்நிலை குறித்து சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துச் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இப்போது பேசுபொருளாகியுள்ளன.