tamilnadu epaper

மதுரை ஆதீனம் கார் விபத்தில் சதி இல்லை ,கள்ளக்குறிச்சி காவல்துறை விளக்கம்

மதுரை ஆதீனம் கார் விபத்தில் சதி இல்லை ,கள்ளக்குறிச்சி காவல்துறை விளக்கம்


கள்ளக்குறிச்சி, மே 5

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை ஆதீனத்தை கார் விபத்தில் கொல்ல சதி திட்டம் நடந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மதுரை ஆதீனமும் தன்னை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக தெரிவித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில் அவரை கொல்ல சதித்திட்டம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த கார் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து என தெரிகிறது. 

கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாக சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியதாக தெரியவருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனமோ, அவர்களை சார்ந்தவர்களோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்தவித புகாரும் இதுவரை கொடுக்கவில்லை. 

பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.