tamilnadu epaper

மத்தியப் பிரதேசத்தில் டேங்கர் லாரி மோதி 7 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில்  டேங்கர் லாரி மோதி  7 பேர் பலி

போபால், மார்ச் 13


மத்தியப் பிரதேசத்தில் எதிரே வந்த கார் மற்றும் ஜீப் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மத்தியப்பிரதேசம் மாநிலம், தார் மாவட்டத்தில் பத்னாவர் உஜ்ஜைன் நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த ஒரு கார் மற்றும் ஜீப் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்கு உள்ளானது.


இது குறித்து அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக ரத்லம் மாவட்டத்தில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தப்பி ஓடிய டேங்கர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.