மயிலாடுதுறை , ஏப் , 23 -
மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் , புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை , மயிலாடுதுறை மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் ஏ ஆர் சி நடேச செட்டியார் ஜூவல்லர்ஸ் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் ஏ .ஆர் .சி .என். அசோக்குமார் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதில்
நூற்றைம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டதை சிறப்பாக செய்யப்பட்டது.
இதில் மயிலாடுதுறை மாவட்ட உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
சிறப்பாக சிகிச்சை அளித்த பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் அவர்களுக்கும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.