..... அன்னை பார்வதி அவதரித்த திருநாளே மே. மாதம், 7ஆம் தேதி வாசவி ஜயந்தி என்று போற்றப்படுகிறது. பார்வதி தேவியின் அம்சமான வாசவி அழகிலும் அறிவிலும் மிகச் சிறந்து விளங்கினார். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை தசமியை வாசவி ஜயந்தியாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். பெண்கள் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கவும், மாங்கல்ய பலம் கூடவும் வாசவி அம்மனை வழிபடுகின்றனர். வாசவி ஜயந்தி நன்னாளில் பார்வதி வணங்கித் தொழுவோம் சந்ததி சிறக்க,சிறப்புடன் வாழ்வோம் எல்லா வளமும் பெற்று வாழ்வோம் வாசவி அம்மனை வணங்கி அருள் பெறுவோம்.