சர்வதேச டென்னிஸ் போட்டிகளின் முக்கிய தொடரான மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் மியாமி நகரில் நடை பெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி புதனன்று அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவ், தரவரிசையில் 17ஆவது இடத்தில் உள்ள பிரான்சின் ஆர்தர் பில்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டில் ஜுவரேவ் ஆதிக்கம் செலுத்தி னாலும், 2ஆவது மற்றும் 3ஆவது செட்டை அதிரடியாக கைப்பற்றிய ஆர்தர் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். பெகுலா அபாரம் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகுலா, தரவரிசையில் இல்லாமல் களமிறங்கிய பிரிட்டனின் நட்சத்திர வீராங்கனை ரடுகானுவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெகுலா 4-6, 7-6 (7-3), 2-6 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.