தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் செயல்பட்டு வரும் ராஜா மேல்நிலைபள்ளியில் 1999 - 2000ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ – மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து கொண்ட மாணவர்கள் தங்களின் பழைய கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொள்ள வந்த முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.
பள்ளி செயலர் திரு.ராம்குமார் ராஜா,
பள்ளி தலைவர் திருமதி. ஜெயந்திராம்குமார் ராஜா நினைவு பரிசு வழங்கி
தலைமை உரை ஆற்றினர்.
மேலும் விழாவில், முன்னாள் மாணவர்கள் தாங்கள் பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர்களுக்கும் தங்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் ஆசிரியை ஒருவர் பேசுகையில் தான் ஓய்வு பெற்று 10 ஆண்டுகளாகி விட்டதாகவும்,
ஆனால் மாணவர்களை பார்க்கும் போது தான் பூஸ்ட் சாப்பிட்ட மாதிரி இருப்பதாக கூறி நெகிழ்ச்சி அடைந்தார்.
முன்னாள் மாணவர் ஒருவர் பேசுகையில் தாங்கள் படிக்கும் போது பள்ளி வராத தங்கள் நண்பர்களுக்காக ஆசிரியர் வருகை பதிவேடு எடுக்கும் போது வகுப்பில் இருப்பதாக கூறி ஏமாற்றி இருப்பதாகவும், அது அன்றைக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் தற்பொழுது நினைத்து பார்க்கும் போது வருத்தமாக இருப்பதால் தன்னை மன்னித்து கொள்ளும் படி கேட்டுக்கொண்டார்.
மற்றொரு முன்னாள் மாணவி பேசும் போது அன்றைக்கு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பயந்தோம், இன்றைக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்து கொள்ளும் நிலை இருப்பதாக கூறினர்.
விழாவில் முன்னாள் பள்ளி மாணவர்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் இயந்திரம் திறந்து வைக்கப்பட்டது.