கடத்தூர் கிளை நூலகம் மற்றும் தருமபுரி மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றம் சார்பில் தொழிலாளர் நாள் விழா, பாரதிதாசன் பிறந்தநாள் விழா, நூல் வெளியீட்டு விழா இன்று 01.05.2025 வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நூலகர் சி. சரவணன் தலைமை வகித்தார். மருத்துவர் சந்திரசேகரன், சொல்லாக்கப் புலவர் நெடுமிடல் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நலன் பற்றி அன்பு அறக்கட்டளை நிறுவுநர் பூவேந்தரசு, புலவர் ப. சுப்ரமணியனார் கருத்துரை வழங்கினர்.
விழாவில் புலவர் துரை. விஜயன் எழுதிய ‘கருப்பு நிலாத் தெருவினிலே’, ‘தமிழா! விடியலை நோக்கி!’ ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களைப் பாவலர் பெரு. முல்லையரசு வெளியிட நூலகர் சி சரவணன், கூத்தப்பாடி மா. பழனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர் .
தொடர்ந்து, பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாக் கவியரங்கம் பாவலர் கோ.மலர்வண்ணன் தலைமையில் நடைபெற்றது .
மதனகோபாலன், கோகுல் காளியப்பன், தகடூர் சு. தமிழரசன், குரு. உதயசூரியன், அரங்கநாயகி கண்ணன், மாலதி அனந்த பத்மநாபன், கோகுலகண்ணன், வெ. குறள்மொழி, சே. அர்ச்சனா, நா.நாகராஜ், துரை. விஜயன், கே. ஆர். சிவலிங்கம், பெ. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
முன்னதாக கோ. மகாலிங்கம் வரவேற்றார். முடிவில் மதனகோபாலன் நன்றி கூறினார். கூத்தப்பாடி மா. பழனி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார். விழாவில் கோவிந்தசாமி ரூபாய் ஐயாயிரம் செலுத்தி, மன்றத்தின் புரவலராகத் தம்மை இணைத்துக் கொண்டார்.