விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வளத்தி ஊராட்சி யில் நடைபெற்றது
தலைமைக் கழக பேச்சாளர் சைதை சாதிக் கலந்து கொண்டு கழக சாதனையை எடுத்து சிறப்புரை ஆற்றினார்
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட தி மு க பொறுப்பாளர் செஞ்சி மஸ்தான் எம் .எல். ஏ பல்வேறு சாதனைகளை எடுத்துரைத்து பேசினார்
மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வளத்தி ஊராட்சியில் மட்டும் ஏழுகோடி அளவிற்கு நலத்திட்ட உதவிகள் செய்து உள்ளோம் என்பதையும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பற்றியும் எடுத்து விளக்க உரையாற்றினார்
பொதுக்கூட்டத்தில் மாவட்ட மாநில ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.