tamilnadu epaper

ருதுராஜ் அதிரடி வீண்: சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி

ருதுராஜ் அதிரடி வீண்: சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி

நடப்பு ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டம் குவாஹாட்டியில் உள்ள பார்​சபரா ஸ்டிடேடி​யத்​தில் இன்று நடைபெற்றது. சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.


முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்தனர். இதில் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ரன்கள் வரை தாக்குப் பிடித்த சஞ்சு சாம்சன் 7வது ஓவரில் நூர் அஹமது வீசிய பந்தில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.


அடுத்து இறங்கிய நிதிஷ் ராணா 81 ரன்கள் விளாசி அணியை காப்பாற்றினார். இதில் 10 பவுண்டரிகள், ஐந்து சிக்ஸர்கள் அடங்கும். 11வது ஓவரில் தோனி ஸ்டம்ப் செய்து நிதிஷ் ராணாவை வெளியேற்றினார். அடுத்து இறங்கிய ரியான் பராக் 37 ரன்கள், துருவ் ஜுரேல் 3, ஹஸரங்கா 4, ஹெய்மெயர் 19 என 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி.


சிஎஸ்கே அணியில் கலீல் அஹமது 2 விக்கெட், அஸ்வின் 1 விக்கெட், நூர் அஹமது 2 விக்கெட், பதிரானா 2 விக்கெட், ஜடேஜா 1 விக்கெட் எடுத்திருந்தனர்.


183 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி இறங்கினர். இதில் 4வது பந்திலேயே ஒரு ரன் கூட எடுக்காமல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ரச்சின் ரவீந்திரா. ராகுல் திரிபாதி 23 ரன்களுடன் வெளியேறினார்.


அடுத்து இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் தான் அணியை ஸ்கோரை ஏற்றியது. 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 63 ரன்கள் குவித்தார். நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆடத் தொடங்கிய ஷிவம் டூபே 19 ரன்களுடன் வெளியேறி ஏமாற்றம் தந்தார். 15வது ஓவரில் ருதுராஜ் வெளியேறினார். விஜய் ஷங்கர் 9 ரன்கள், ஜடேஜா 32 ரன்கள் எடுத்தனர். ஆரவாரத்துடன் களத்துக்கு வந்த தோனி அணியை காப்பாற்ற முயற்சித்து கடைசி ஓவரின் தொடக்கத்தில் ஹெட்மெயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இப்படியாக 20 ஓவர் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் சிஎஸ்கே அணி ராஜஸ்தானிடம் தோல்வியடைந்தது.