அன்புடையீர்,
வணக்கம். 8.4.2025 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புதமாக இன்று எனக்கு அழகாக தொகுத்து கொடுத்தது. ஆழி தேரோட்டத்தில் பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர் என்ற செய்தி பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. திருப்புல்லாணியில் இன்று இரட்டை கருட வாகன சேவை என்ற செய்தி மிகவும் அருமையாக பார்ப்பதற்கே மனதிற்கு மகிழ்ச்சியையும் புல்லரிப்பையும் கொடுத்தது.திருக்குறள் மிகவும் அருமை படிக்கும் போது மனதுக்குள் ஒரு உற்சாகம் வந்தது. மருத்துவ குணம் கொண்ட பதநீர் என்று பதநீர் பற்றி படித்தவுடன் பதநீர் என்றால் அது நாம் சாப்பிடக்கூடாத ஒரு பானம் என்ற என்னுடைய தவறான எண்ணத்தை மாற்றியது. ஒடிசா சிற்பக் கலைஞர் சுதர்சன் அவர்களுக்கு சர்வதேச விருது என்ற செய்தி மகிழ்ச்சியாக அவருக்கு பாராட்டு சொல்ல தோன்றியது. தினம் ஒரு தலைவர்கள் என்ற பகுதியில் இன்று இரண்டு தலைவர்கள் பற்றிய மிக அற்புதமான செய்தியை கொடுத்தது. பாராட்டுக்குரியது நீலமேகப் பிள்ளை அவர்களின் வரலாறும் ப.. ராமமூர்த்தி அவர்களின் வரலாறும் மிகவும் அருமையாக நல்ல செய்தியாக எண்ணி படிக்க வைத்தது. பல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையை இப்படியும் தடுக்கலாம் என்று நல்ல அருமையான தகவலை சொன்னது பயனுள்ளதாக இருந்தது.மீம்ஸ் மிகவும் அருமை விடுகதையும் ஜோக்ஸ் மிகவும் ரசித்து படிக்க வைத்தது. சமையலறை ஸ்பெஷலில் கொள்ளு ரசம் வைப்பது எப்படி என்று மிக அழகாக சொல்லிக் கொடுத்தது பயனுள்ள தகவல். பாராட்டுக்கள். கொத்தவரங்காயின் மருத்துவ பயன்களை படித்தது மகிழ்ச்சியாக இருந்தது பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது என்ற செய்தியும் படமும் மகிழ்ச்சியாக இருந்தது நேரில் செல்ல முடியாவிட்டாலும் அந்த படங்களை பார்க்கும்போது நேரில் சென்று பார்த்த ஒரு உணர்வு வருகிறது மனம் நிறைந்த பாராட்டுக்கள் மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்று மத்திய அரசு கொடுத்த பணத்தைப் பார்த்ததும் இது நல்ல பயனுள்ள தகவல் என்று எண்ணினேன். கேரளா மற்றும் நான்கு மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை என்று படித்தவுடன் கோடை மழை துவங்கி எல்லோரையும் குளிர வைக்கிறது என்று மகிழ்ச்சியாக இருந்தது. அதிபர் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம் என்ற செய்தி அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சி அரசியலை அழகாக புரிய வைத்தது. கிழக்கில் ஆதவன் வருவது எப்படி உறுதியோ அதேபோல் விடியற்காலையில் தமிழ்நாடு இ பேப்பர்காம் என்ற அழகான நாளிதழ் மலர் அலைபேசியில் வருவது உறுதி என்று ஒவ்வொரு நாளும் அதை உறுதியாக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
-உஷா முத்துராமன்