tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-26.04.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-26.04.25

அன்புடையீர்,


 வணக்கம். தமிழ்நாடு இ பேப்பர் 26.4.25 அன்றைய நாளிதழில் முதல் பக்கத்தில் சிக்கிம் நிலசரிவில் ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவிப்பு என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. நாளை வர விருக்கும் லாபம் இதழினை வெளியிடும் தமிழ்நாடு இ பேப்பரை விட படிக்கும் எங்களுக்கு தான் லாபம் என்று ஆர்வமுடன் காத்திருக்கிறேன். இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக எனக்கு அமைந்தது.


திருக்குறள் என்றாலே அதன் பொருளுடன் படிக்கும்போது ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது உண்மை. 241 வது திருக்குறளை ஆர்வமுடன் படித்தேன். சென்னை மயிலாப்பூரில் நாச்சியார் திருக்கோலத்தில் சுவாமி ஊர்வலம் என்ற படமும் செய்தியும் கண்கொள்ளாக் காட்சியாக உடலையும் உள்ளத்தையும் சிலிர்க்க வைத்தது. 


நலம் தரும் மருத்துவம் பகுதியில் கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து இந்தியாவில் அனுமதி ரத்து என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. அரசு நிலத்தில் அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சர் துறைமுருகன் அவர்களின் பேச்சு நூற்றுக்கு நூறு உண்மை.


சுற்றுலா என்றாலே ஆனந்தமாக இருக்கும் ஆனால் அந்தச் சுற்றுலா சென்ற சென்னை மருத்துவ மாணவர்கள் மூன்று பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை படிக்கும் போது சிறிது பார்த்து நடந்து கொள்ளக் கூடாதா என்ற ஒரு ஆதங்கம் மனதில் எழுந்தது.


ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் படிக்க வைக்கும் ஒரு பகுதி என்றால் அது தினம் ஒரு தலைவர்கள் பகுதி தான் 26. 4:25 அன்றைய தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பெ. தூரன் வரலாறு மிகவும் அருமை.


எக்கச்சக்கமான செய்திகளை அள்ளிக் குவிக்கும் பல்சுவை களஞ்சியம் பகுதி ஆர்வமுடன் படித்தேன். மீம்ஸீம் விடுகதையும் ஜோக்ஸும் வழக்கம்போல் என்னை சந்தோஷ கடலில் மூழ்க வைத்தது.


 வாழ்வு தரும் ஆரோக்கியம் பகுதியில் வந்த தேனின் மருத்துவ குணங்கள் மிக அருமையான தகவல். தினமும் தேன் சாப்பிடும் எனக்கு அது நல்ல பயனுள்ள தகவலாக அமைந்தது. முகப்பரு பிரச்சனை தீர்க்க வழி சொன்னது அருமை பாராட்டுக்கள்.


போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட செய்தி பார்த்து அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அந்த பக்கத்தில் வந்த எல்லா செய்திகளுமே மிக அருமையாக இருந்ததால் ஒவ்வொன்றாக பார்த்து ரசித்து படித்தேன்.


டாஸ்மார்க் கடையே மூடப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டாஸ்மாக்கில் ரூபாய் 1000 கோடி ஊழல் புகார் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது.


காஷ்மீர் சிக்கலில் சிக்கிக்கொண்ட தமிழர்களை மீட்கும் பணி தமிழக அரசு மேற்கொள்வது மிக நல்ல செய்தி. சாலையில் கிடந்த பையில் ரூபாய் 2 லட்சம் இருப்பதை பார்த்து அதை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த அந்த கட்டிட தொழிலாளருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வாடிகன் புறப்பட்டார் நம் ஜனாதிபதி என்ற செய்தி அவர் அங்கு சென்று இறைவனை பிரார்த்தனை செய்து அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று நானும் பிரார்த்தனை செய்தேன். சாய்பாபாவின் பக்தை ஆகிய நான் சத்ய சாய்பாபா உருவம் குறித்த 100 ரூபாய் நினைவு நாணயம் என்ற செய்தியை படித்து மகிழ்ந்தேன்..


புத்தி நிறுத்துங்கள் என்ற அவர்கள் கண்டனம் தெரிவித்த செய்தியை படித்ததும் உலகத்தில் நடக்கும் அனைத்து செய்திகளும் கண் முன்னே வந்தது.


பக்தி செய்திகள் பரவசம் ஊட்டுகின்றன. அரசியல் செய்திகள் ஆர்வத்தை அதிகப்படுத்துகின்றன. ஆரோக்கிய செய்திகள் ஆனந்தமாக படிக்க வைக்கின்றன. இப்படி எல்லாவற்றையும் செய்திகளாக தொகுத்து ஒரு கதம்ப மாலை போல் தினமும் விடியலில் எங்களுக்கு கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்