.ஆந்திராவில் விளையாடிய 4 சிறுவர்கள் பலி நீரில் மூழ்கிய 5 சிறுவர், சிறுமியரும் சாவு. தினசரி இதுபோன்ற சம்பவங்கள் எங்கு பார்த்தாலும் நடக்கின்றன. விடுமுறையில் சுற்றுலா செல்பவர்கள், மற்றும் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்பவர்கள் தங்கள் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். அருகில் உள்ள நீரோடைகள், தேங்கியுள்ள தண்ணீரில் குளிப்பவர்கள் என சமீப ஒரூ மாதத்தில் பலர் இறந்துள்ளனர். சுற்றுலா சென்ற எம்.பி.பி.எஸ் படிக்கும் இரு பெண்கள் நீரில் மூழ்கி இறந்த செய்தி பத்திரிகைகளில் வந்தது. புது இடங்களுக்கு செல்பவர்கள் சுய கட்டுப்பாட்டுடன் தண்ணீரில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிறுவர்களுக்கு பெற்றோர்தான் பொறுப்பு. தண்ணீர், மின்சாரம், தீ மூன்றும் அபாயகரமானது சில நொடிகளில் உயிரை பறித்து விடும். ஜாக்கிரதை.
எஸ்.அப்துல் ரஷீத்.
தஞ்சாவூர்.