tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-15.04.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-15.04.25


தமிழ்நாடு இ.பேப்பரில் வெளிவரும் 'நலம் தரும் மருத்துவம்' பகுதி மூலம் காய்கறிகள், பழங்களின் பயன்களை பற்றி நன்கு அறிந்துக்கொள்ள முடிகிறது. அது வாழ்க்கைக்கு, உடல் நலனுக்கு மிகவும் பயன் படுகிறது.


  சுரைக்காயை பற்றி நான் இதுவரை அலட்சியமாகதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏதோ சமைக்க உதவும் காய்களில் ஒன்று என்றளவே அதை நினைத்திருந்தேன். இப்போது நமது பேப்பரில் படிக்கும்போதுதான் அதன் அருமைகளை உணருகிறேன். நான் இந்தியா வந்ததும் என்னுடைய உணவில் அவ்வப்போது சுரைக்காயும் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.


  முகில் தினகரனின் 'பந்தியிலே ஒரு பாதகன்' படித்தபோது மனிதர்களுக்கு இப்படியும் ஒரு நிலை இருக்கிறதாயென்று வருத்தமாக இருந்தது. ஆனாலும், கடந்த காலங்களை ஒப்பிடும்போது இப்படிப்பட்ட மனிதர்களின் பரிதாப நிலை மாறிவிட்டதாகவே தோன்றுகிறது.


  கோபாலன் நாகநாதனின் 'பிச்சைக்காரி' சிறுகதை அவள் கொள்ளைக்காரி இல்லை என்பதை உணர்த்திய விதம் மனதைத் தொட்டது. பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் திருடுபவர்கள் என்று அர்த்தமல்ல என்பதை இந்த கதை மூலம் உணர முடிந்தது. 


  நிரஞ்சனாவின் 'யாதுமாகி நின்றவள்' தொடர்கதையில் யாழினியை பற்றி அப்படி என்ன ரகசியம் இருக்கிறது?

அப்படி என்ன சத்தியம்? ஆதிகேசவன் குறிப்பிட்ட சத்தியம் எதைப் பற்றியது? நானும் தெரிந்துக்கொள்ள இந்த தொடர்கதையின் வரும் அத்தியாயங்களை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.


  ராமேஸ்வரம் கோவிலுள்ள லிங்கங்களைப் பற்றி 'இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ' என்ற கட்டுரையின் மூலம் நிறைய புது புது தகவல்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது. எம்.ராதாகிருஷ்ணன் மிகச்சிறப்பாக தொகுத்து எழுதியிருக்கிறார்.


  தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் பி.எஸ்.பி.பொன்னுசாமி அவர்களைப் பற்றி படித்தபோது, சுதந்திரத்திற்காக அவர் எவ்வளவு படாதபாடு பட்டிருக்கிறார் என்பதை உணர்வு பூர்வமாக அறிந்தேன். இந்த கட்டுரையை படித்தபோதுதான் 'நிலை விலங்கு' என்ற தண்டனையை பற்றியே அறிந்தேன். மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.


  சமையல் அறை ஸ்பெஷலில் 'உணவு சமைக்கும் போது....' என்ற தகவல் தொகுப்பில், சமையலில் உப்பு அதிகமாகி விட்டால் உருளைக்கிழங்கை அரிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்' போன்ற தகவல்கள் நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளவை.



-சின்னஞ்சிறுகோபு,

 சிகாகோ.