பிரதமர் இலங்கைப் பயணம் மீனவர் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்.
கடன் பெறுவது இதுநாள்வரை எளிமையாக இருந்தபின்
தற்போது சற்று நடைமுறைகளைக் கண்டிப்பாக்குவது மக்களுக்கு சிரமத்தைத் தருகிறது. இந்தியச் சேம நன்கு பரிசீலித்து வழிமுறைகளை மேம்படுத்தலாம்.
தனியாரிடம் பெற்ற கடனைத் திரும்ப செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு நிதிநிறுவனக் கெடுபிடியால் பெண் தற்கொலைச் செய்தியும் இன்று வெளியாகியுள்ள
நிலையைக் கவனிக்க வேண்டும்
பப்பாளிப் பழப் பயன்கள் அளவிடற்கரியது.
ஸ்டார்ட் அப் கம்பெனி என்பது உயர் தொழில் நுட்பம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ப்யூயல் கோயல் சொல்லியுள்ளது நியாயமானதே.அதைவிடுத்து உணவு விடுதிகளில் இருந்து உணவு கொண்டு வர ஒரு செயலியை உருவாக்குவது எவ்வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
போக்சோ வழக்கை விசாரிக்க மென்மேலும் நீதிமன்றங்கள் திறப்பது நல்லதுக்கில்லை.
நடிகைகளால் நாடு சீரழிகிறது. இப்படி உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் படம் எடுத்து காட்டுகிறார்களே.
இளம் வாலிபர் உள்ளத்தில் கிளர்ச்சியைத் தூண்டாதா? மாதர் ஆணையம் எல்லாம் இதனைக் கண்டிக்காதா?
பாரதி தான் கண்ட புதுமைப் பெண்ணா இவர்கள் என்று நொந்து போயிருப்பார்?
காய்ச்சலில் இத்தனை வகைகளா? தற்போது தக்காளிக் காய்ச்சல் என்று ஒரு வகையா?
திரு நீலகண்ட பிரமச்சாரி வரலாறு அருமை.
-சிவ. சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி