tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-15.05.25

வாசகர் கடிதம்  (நடேஷ் கன்னா)-15.05.25


மற்ற பத்திரிகைகளுக்கு வாசகர் 


கடிதம் எழுதுவதைவிட தமிழ்நாடு 


இ பேப்பர் க்கு கடிதம் எழுதுவது 


மிகவும் உற்சாகமாக உள்ளது


வாசகர்களை ஊக்குவிப்பதில் 


இ பேப்பர் முன்னோடியாக 


திகழ்கிறது. 


ஜனாதிபதியிடம் முப்படை தளபதிகள் 


சந்தித்து போர் பற்றிய செய்தியை 


விளக்கினார்கள். கொடநாடு 


வழக்கிலும் கைதிகள் விரைவில் 


தண்டிக்கப்படுவார்கள் என 


முதல்வர் கூறி இருக்கிறார். 


ஹைதராபாத்தில் உலக அழகி போட்டி 


நடைபெற்று வருகிறது. 


இத்தகைய சூழ்நிலையில் 


இதனைத் தவிர்த்து இருக்கலாம் 


குடி மூலம் லிவர் கிட்னி பாதிக்கப்படும் 


இந்த கட்டுரை குடிமக்களுக்கு 


சிறந்த அறிவுரையாகும். 


வேலூர் முத்து ஆனந்த் அவர்களின் 


மகிழ்வித்து மகிழுங்கள் என்ற 


கவிதை ஒரு காவியம் கவிதையின் 


வரிகள் விளக்கம் அற்புதம். 


ரிஷி வந்தியா சார் அவர்களின் 


உயிர் பயம் கவிதை எதார்த்தமாக 


இருந்தது. நெல்லைகுரலோன் 


கவிதை அனைத்தும் தனி ரகம். 


சீனா அருணாசலப் பிரதசத்தில்

 

ஒரு கிராமத்தையே உருவாக்கி 


 விட்டது இந்தியா அதனை


அனுமதித்து வேடிக்கை பார்த்துவிட்டு 


அருணாச்சல பிரதேசம் எங்களுக்கு 


சொந்தம் என்று கூறுவது 


அபத்தமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் 


மாணவர்களுக்கு கல்வி என்பது 


எட்டா கனியாக உள்ளது அவர்கள் 


தினசரி போர் பயத்தில் உள்ளனர். 


எங்களை சீண்டினால் கடும் 


விளைவுகளை சந்திக்க நேரிடும் 


என அமெரிக்காவுக்கு சீனா 


எச்சரிக்கை. ட்ரம்ப் பதவி ஏறற

 

நாளில் இருந்து ஓவராக தான் 


ஆட்டம் போடுகிறார். 


திருப்பதியில் தரிசனத்துக்கு 


சிபாரிசு கடிதம் ஏற்க மறுப்பு 


இந்தியா பாகிஸ்தான் போரில் 


11 பேர் தான் இறந்ததாக பாகிஸ்தான் 


கூறுகிறது. பாகிஸ்தான் தீவிரவாத 


செயல்கள் மூலம் உலக நாடுகள் 


அழிவுக்கு வழிவகுக்கும். 


துபாய் லாட்டரியில் சிவகாசி 


வாலிபருக்கு இரண்டரை கோடி 


கிடைத்துள்ளது. நமக்கெல்லாம் 


கனவில்தான் லாட்டரி யோகம் 


வருகிறது. தமிழ் புத்தாண்டு 


அன்று என் குலதெய்வத்தை 


காலண்டர் வடிவில் அச்சிட்டு 


புத்தாண்டு தினத்தன்று 


கிடைக்கச் செய்த தமிழ்நாடு 


இ பேப்பருக்கு மிகவும் கடமைப்பட்டு 


இருக்கிறேன் மிக்க நன்றி 


தொடரட்டும் உங்கள் தொண்டு



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி