தினசரி என் போன்ற எண்ணற்ற
வாசகர்களை அதிகாலையில்
எழுப்புவது தமிழ்நாடு இ பேப்பர் தான்
அது மட்டுமல்ல 28 லட்சம்
வாசகர்களுக்கும் அதிகாலையில்
மொபைல் மூலம் வாட்ஸ் அப்
அனுப்புவது என்பது பிரமிப்பாக
உள்ளது. இதற்கென ஒரு பெரிய
டீமே செயல்படுவதாக தெரிகிறது
அனைவரது உழைப்புக்கும்
வாழ்த்துக்கள் சார்.
மசோதாக்களுக்கு கவர்னர்
ஜனாதிபதிக்கு கால நிர்ணயம்
செய்வதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு
தகுதி உள்ளதா என ஜனாதிபதி
கேள்வி கேட்டு இருக்கிறார்
இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை
நீதிபதி நான் பதில் சொல்ல
வேண்டும் அம்மா சமையல் கதை
அற்புதமாக இருந்தது.
நெல்லை குரலோன் எழுதிய
எண்ணி துணிக கவிதை
நல்ல விழிப்புணர்வு கவிதை ஆகும்
எங்கள் நாட்டு அணு ஆயுதங்களை
பற்றி கேள்விப்பட்டு இந்தியாவுக்கு
பயம் வந்துள்ளது என பாகிஸ்தான்
கூறியிருப்பது வேடிக்கையாக
உள்ளது. ஆழ் கடலுக்குள் மனிதனை
அனுப்பும் சமுத்திராய ன் திட்டம்
அடுத்த ஆண்டு செயல்படுத்த உள்ளது
பாகிஸ்தான் விமான தளங்களை
குறிபார்த்து சேதப்படுத்தியது
இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும்
வெற்றியாக்கும். அது எப்படி சார்
28 லட்சம் வாசகர்களுக்கும்
தினசரி அதிகாலை மொபைல் மூலம்
எப்படி உங்களால் அனுப்ப முடிகிறது
இது ஒரு கின்னஸ் சாதனை தான்
ஒரு பெரிய டீமையே கையில்
வைத்திருப்பது வினோதமாக
உள்ளது தமிழ்நாடு இ பேப்பர்
குழுவில் உள்ள அனைவருக்கும்
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி