tamilnadu epaper

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-07.04.25

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-07.04.25

தமிழ்நாடு இ பேப்பர் க்கு தலை வணக்கம் 7.4.2025 பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி அர்ப்பணித்தார். நீலகிரியில் 56 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கல். அனைத்து ராமர் கோவில்களிலும் ஸ்ரீ ராம நவமி சிறப்பாக கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது.2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்.!-.நிர்மலா சீதாராமன். பங்குனி உத்திரம். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது இம்மாதத்தில்தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான் தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்  மாணவன் முட்டை கேட்டதற்கு அடிக்கணுமா. கைது செய்தது தான் சரியான செயல்  சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்  எதற்கெடுத்தாலும் மனைவியை கொலை செய்வது. கத்தியால் குத்தி பெட்டியில் அடைப்பது என்னதான் நடக்கிறது உலகம் எதை நோக்கிச் செல்கிறது என்றே தெரியவில்லை. விரைவில் புதிய ரூபாய் 10,500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம். மியான்மர் நிலநடுக்கத்திற்கு 30 லட்சம் பேர் பாதிப்பு ஐ.நா.தகவல் வேதனையான செய்தி. டிரம்பின் புதிய வரிகளால் அமெரிக்க பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படும் சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு. ஈன்ற பிறந்தநாள் திருமண நாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்  கவிதைகள், சிறுகதைகள், ஜோக்ஸ், பல்சுவை களஞ்சியம், நலம் தரும் மருத்துவம்... இளநீர் குடிப்பதால் நோயின் வீரியம் குறையும், தொண்டை வலி நீங்கும், ரத்தக் கொதிப்பை குறைக்கும். அம்மை நோய் உள்ளவர்கள் இளநீர் குடித்தால் நோயின் வீரியம் குறையும். உடல் சூட்டை குறைக்க முக்கிய பங்காற்றுகிறது. இளநீர் பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருப்பதாக மருத்துவம் கூறுகிறது. தினமும் எண்ணற்ற செய்திகளை எங்களுக்கு தெள்ளத் தெளிவாக கொடுக்கும் தமிழ்நாடு பேப்பர் க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்  தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர்


-நிர்மலா ஸ்ரீதர்

திருவண்ணாமலை