தமிழ்நாடு இ பேப்பரின் விடியல் வெளிச்சம் வியப்பால் புருவம் உயர்த்த வைக்கிறது.
அதிகாலையில் நெருடல் இல்லாத நேரிய பயணமாக
தமிழ் நாடு இ பேப்பரின் வாசிப்பு அனுபவம் நமக்கு இதம் தருகிறது. இனிமை அளிக்கிறது.இளமை ஊட்டுகிறது.இது வெறும் புகழ்ச்சி இல்லை.மாயம் இல்லை.மந்திரம் இல்லை.தந்திரம் இல்லை.மதிநுட்பம் மிக்க ஆசிரியர் குழுவினரின் மனப்பூர்வமான -- மகத்தான - மதிக்க துடிக்கும் பங்களிப்பு.
இந்த உலகின் விடியலுக்கு வேர்க் காரணமாக உள்ளது
என்பதை எடுத்தியம்பவும் வீரிய உள்ளோட்ட ஞானமும் விரிந்த உள்ளமும் கண்டிப்பாக வேண்டும்.
வேண்டும் வரை உண்ணலாம் என்கிற சிந்தனை விருந்துக்கான உபசரிப்பு விரிப்பு, சிலிர்ப்புடன் கூடிய
புன்சிரிப்பு அள்ளி ஆராதிக்கிறது.
இந்த அடி ஆழத்தில் இருந்து வரும் ஆனந்த வார்த்தைகளில் வெறும் ஆரவாரம் மட்டும் இருப்பதாய் யாரும் முகம் சுளிக்க மாட்டீர்கள். காரணம்.
தமிழ்நாடு இ பேப்பரின் தரமான வாசக உள்ளங்களுக்கு
உள் வெளிச்சம் விளங்கும். போலி எது பம்மாத்து எது நிஜம் எது நேர்மை எது என்று பகுத்தாளும் பக்குவத் தராசை பொழுதுக்கும் நெஞ்சில் நிலை நிறுத்தி வைப்போர் ஆயிற்றே! வரம் வாங்கி வந்திருக்கும் இத்தகைய வாசகப் பெருமக்கள் தமிழ் நாடு இ பேப்பருக்கு
பெருமை மட்டுமல்ல...
பெருமிதமும் கூட...
வாழ்க வாழ்க பல்லாண்டு... பன்னூறாண்டு... பல்லாயிரத்தாண்டு!
Think BIG!
உச்ச நீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் 14 கேள்விகளை முன் வைத்துள்ளார்.
முக்கியச் செய்தி தான்.
முடிவுகாகாக காத்திருப்போம்.
முதிர்வு ஜனநாயகம் காப்போம்.
ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிப்பதில் ஏன் ஆட்சேபனை.
முதல்வர் ஸ்டாலின் முந்திக் கொண்டு முழு ஆவேசம் காட்டல்...
சுட்டியும் அகப்பையும்னா தட்டாம முட்டாம இருக்குமோ?
சத்தம் சந்தமாக வந்தால் சந்தோஷம்.
காது ஜவ்வு கிழியுற மாதிரி வராமல இருப்பதாக!
மியான்மார் எல்லையை பயங்கர வாதிகள் 10 பேர் சுட்டுக் கொலை.
பயங்கர வாதத்திற்கு இது போதாத காலம்.
நல்லது தானே பாருக்கு!
மிருக நிலையில் இருந்து மனித நிலைக்கு வர வேண்டும்.தெய்வ நிலை யெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.
படிப்படியாக மனித குலம் பண்பட பரமாத்மாவை வேண்டுவோம்.
தினசரி ஒரு நிமிஷம்
போதும்...ப்ளீஸ்!
இன்றைய சிந்திக்க ஒரு நொடி சிலிர்க்க வைத்தது நிஜம்.
சின்னச சின்ன செய்திகளிலும் தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினரின் செதுக்கல் மகத்துவம் தெரிகிறது.
செம்மாந்த சுகம் தருகிறது.
சுடச்சுட அரசியல் செய்திகள் அணிவகுப்பாய் அரங்கேற்றம்.
சசிகலா விஸ்வநாதனின் தந்தையும் ஆன அன்னை தலைப்பே கவித்துவ செழிப்புடன் சுடர் விடுகிறது.சபாஷ்.
முகில் தினகரனின் அம்மா சமையல் பிரமாதம்.சுக வாசனை அள்ளுகிறது.வெல்டன்.தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வாண்டாயத் தேவன் வரலாறு. செம விறுவிறுப்பு.சிந்தை
கவர்கிறது. தினசரி ஒரு வரலாறு... தமிழ்நாடு இ பேப்பரின் வளமான சிந்தைக்கு சான்று!
வரலாறு என்றால் வழிகாட்டி என்பதை தினந்தோறும் உணர்ந்து உய்கிறோம்.
தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது...
தெரியாமல் தான் கேட்கிறேன்...
தினம் ஒரு தலைவர் என்பது தானே இலக்கணப்படி சரி...
தினம் ஒரு தலைவர்கள். எப்படி?
இலக்கணம் மீறிய இலக்கியம் இத்தலைப்பில் உள்ளதோ...?
கவிதைகள் அனைத்தும் கற்கண்டு என்று எத்தனை நாளைக்குத் தான் சொல்வது? நாளைக்கு புது வார்த்தைகளைத் தேடித் தேடித் தான் கவிதை களையும் கவிஞர் பெரு மக்களையும் புகழ வேண்டும். அந்த அளவுக்கு அக்மார்க் நேர்த்தியில் அனைத்துக் கவிதைகளும் ஜொலி ஜொலிக்கின்றன.
வழக்கம் போல் ஆசிரியர் குழுவினர்க்கு
ராயல் சல்யூட்!
வாழ்க வளமுடன்!
-நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்