தமிழ் நாடு இ பேப்பரின் வெற்றிப் பயணம் வியக்க வைக்கிறது.
நேர்மையும் நேர்த்தியும் சம விகிதத்தில் கலந்து
செதுக்கல் பண்புக்கு
உத்தரவாதம் அளிக்கும் உன்னதம் உணர்ந்ததால் பாராட்டி மகிழ வார்த்தை இன்றி தவிக்கின்ற ஆனந்த அவஸ்தை... இதைப் புரிந்து கொண்டு புன்னகைக்கும் ஆற்றல் மிக்க நுட்ப வேந்தர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்...
இத்தகைய பேருணர்வு தரும் பரவசத்துக்கு வேர்க் காரணமாக விளங்கும் தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினர் க்கு என்றென்றும் பாராட்டு!
என்றென்றும் வாழ்த்து.
இந்த அரிய பணிக்கு
அவர்களுக்கு என்றென்றும் கிடைக்கும், எல்லாம் வல்ல இறைவன் அருளும் கருணைப் பெருவெள்ளம்.
மேலே கூறிய அத்தனை வரிகளுக்கும் தூய அன்பொன்றே காரணமே அன்றி, வேறொன்றறியோம் பராபரமே!
பல்சுவை களஞ்சியம்...
பஞ்சாமிர்த சுவையில்
அதிர்வலைகளோடு அசத்துவது தனிச்சிறப்பு!
எதிர்பார்ப்புக்கு மீறிய
இனிய படைப்புகளால்
நவரசம் ததும்பும் அறுசுவை தாண்டிய
பெருஞ்சுவை பொக்கிஷமாய் திகழ்ந்து எல்லோரையும் திணறிடித்து வரும்
தேர்ந்த ஞானத்திற்கும்
தனித்திறமையால்
தேர்வு செய்து அக்மார்க் தரத்தில் அரங்கேற்றிய ஆசிரிய பேருள்ளங்களுக்கும்
வார்த்தைகளால் நிச்சயம் பாராட்டுரைக்க இயலாது.
அத்தனை கவனிப்பும் கருத்தூன்றலும் மொத்தத்தில் முழுவடிவமாய்
பரிணமித்ததை
உணரவும் முடிகிறது.
உரக்கச் சொல்லி உற்சாகம் ஊட்டவும உள்ளம் துடியாய்
துடிப்பதும் இயல்பாய் தெரிந்து இதயம் மலராய் விரிகிறது.
இந்த தருணத்தில் ஒரு முக்கியமான நினைவூட்டல்...
ஒரு கோடி வாசக சொந்தங்களை இந்த தளத்தில் இணைக்க வேண்டுமென்ற தமிழ் நாடு இ பேப்பரின்
ஆக்கப்பூர்வமான இலக்கு எளிதில் வெற்றி அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
திட சிந்தனையும் தெளிந்த நம்பிக்கையும் தூய அன்பும் செழித்து தழைத்தோங்கும் இந்த இலட்சிய பயண அஸ்திவாரம் அபார பலமிக்கது என்பதை அனைவரும் அறிவோம்.
தொடர்ந்து தொய்வின்றி
எழுச்சி மிக்க இந்தப்
பயணத்தில் அனைவரும் அன்பைப்
பிரதானமாக் கொண்டு ஆர்வமுடன்
பயணிப்போம் ..
சமுதாய மறு மலர்ச்சி
காண்போம்.
வெற்றி நிச்சயம்
வாழ்க வளமுடன்.
-நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்