tamilnadu epaper

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-06.04.25

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-06.04.25

வணக்கம்

     06.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.


   உண்மையான அண்டை நாடாகவும், நட்பு நாடாகவும் இருக்கும் இலங்கை நமது பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்திய மீனவர்களை அவர்களது படகுகளோடு விடுவிக்க வேண்டும்.


    பொருளாதாரத்தில் 9.69% சதவீதத்துடன் உச்சம் தொட்ட நம் தமிழ்நாடு வரும் ஆண்டுகளில் அதைத் தக்க வைத்து இன்னும் அதிகமான வளர்ச்சி பெற வேண்டும். வாழ்த்துகள்.


  சிபில் ஸ்கோரை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கணக்கிட்டு பெர்சனல் லோன் வழங்க வேண்டும் என்று ஆர்பிஐ விதிமுறை விதித்திருப்பது அவசரகாலத்துக்கு லோன் வாங்கும் நடுத்தர வர்க்க மக்களை அதிகம் பாதிக்கும். நகைக்கடன் வாங்கவும் விதிமுறைகள் இறுக்கப்பட்ட சூழலில் இந்த லோனுக்கும் புதிய விதிமுறை என்பது அதிக பாதிப்பை தரும். இவ்வாறெல்லாம் வணிகர்களுக்கு பெரும் பணக்காரர்களுக்கோ பார்ப்பது உண்டா எனத் தெரியவில்லை.


  தமிழகத்தில் பரவும் தக்காளிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை சுகாதாரத்துறை இன்னும் அதிகமாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். போதிய மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க உறுதி செய்து கொள்ள வேண்டும்.


  கம்பன் கவிநயத்தை வியந்து கொண்டே இருக்கலாம். நுட்பத்துடன் சொற்களைக் கையாளுவதில் கம்பனுக்கு நிகர் கம்பனே. உள்ளார்ந்து புரிந்து கொண்டதாலேயே கண்ணதாசனால் அந்த சொற்களின் சாரம்சத்தை உள்வாங்கி புதிய சொற்களால் பாடல் புனைந்திருக்கிறார்.


   ஆஷ் கொலைவழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வாழ்க்கையை தியாகம் செய்தவர்களில் நீலகண்டரும் ஒருவர். ஒரு காலகட்டத்தில் ஆன்மீகத்தை ஏற்றுக்கொண்டு நீலகண்ட பிரம்மச்சாரியானவர். சிறப்பானதொரு கட்டுரை.


  சோதிடம் அறிவோம் பகுதி கட்டுரைகள் சிறப்பு.


   தர்பூசணி விசயத்தில் தாம் கொடுத்த வீடியோவால் உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதேபோன்று விளம்பரத்திற்காக வதந்திகளையும் ஆபாசமாக பேசி அங்க அசைவுகளைக் காண்பிக்கும் யூடியூபர்களையும் தண்டிக்க வேண்டும்.



-தாணப்பன் கதிர்

( ப. தாணப்பன் )