வணக்கம்
13.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.
குடியரசு தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்த நீதிமன்ற உத்தரவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. காலத்தே நடக்காத செயல் காலந்தாழ்த்தின் பயனில்லை.
வெற்றிக்கூட்டணியோ தோல்விக்கூட்டணியோ முதல்வர் உட்பட அக்கூட்டணிக் கட்சியினர் இப்போதே பதற வேண்டிய அவசியம் இல்லை.
கோரிக்கை மனுக்களை கிடப்பில் போடுவது கடமையை. மீறுவதாகும் என்று கண்டித்திருக்கும் நீதிமன்றத்துக்கு வாழ்த்துகள்.
வாட்ஸ்அப்பில் இமேஜ் ஸ்கேனிங் மூலம் மோசடி விழிப்புணர்வு செய்தி. கவனமாக இருக்க வேண்டியது நாம்தான்.
புத்தகங்கள் நம்மைச் செழுமைப்படுத்தும் நண்பன் என்று அழகாகச் சொன்ன உண்மைக்காதல் கட்டுரை சிறப்பு.
குருத்தோலை ஞாயிறு இயேசு. உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறாகும். பனையோலைதான். குருத்தோலை என்றும் அந்த பனைஓலைதான். பனையோலை ஏன் சிறப்பு மிக்கது என்று எடுத்துக்கூறிய கட்டுரை சிறப்பு. பனை சங்ககாலம் தொட்டே நம் வாழ்வியலோடு இணைந்து பயணிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் பாஷ்யம் என்கிற ஆர்யாவின் வரலாறு மெய்சிலிர்க்க வைத்தது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தற்போது இருக்கும் ஜார்ஜ் கோட்டையில் தனியாக மேலேறி அவர்களது கொடியை எடுத்து விட்டு நமது தேசியக்கொடியைப் பறக்கவிட்டவர் எனும் செய்தி அன்னாரின் தைரியத்தை மட்டுமல்ல தேசபக்தியையும் பறைசாற்றியது.
தாய்லாந்தின் சோங்க்ரான் பண்டிகை நமது தமிழ்ப்புத்தாண்டைப்போல் பெருமை மிகு விழாவாக தெரிந்தது.
திருமண வயதின் இடைவெளி குறித்த கட்டுரை அறிவியல் பூர்வமானதும் கூட.
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் மட்டுமல்ல சேவையிலும் நமது தமிழகம் முதலிடம்தான்.
வேலை முக்கியம்தான். ஆரோக்கியம் அதைவிட முக்கியம் என்று உணர்ந்து பணிசெய்ய வேண்டும். வேலைப்பபளு நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடாது. அப்படிப்பட்ட வேலையை எவ்வாறு குறைக்க பகிர என்று யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
-தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )