9.69 சதவீத வளர்ச்சியுடன் தமிழ்நாடு" />
தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் அதன் அங்கமாகிய அங்கு பணிபுரியும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய வணக்கம் ! " பொருளாதாரத்தில் 9.69 சதவீத வளர்ச்சியுடன் தமிழ்நாடு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது " என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது நிச்சயமாக அரசின் சாதனைதான் என்பதில் சந்தேகம் இல்லை. வாக்களிக்கும் சாமானியன் இந்த புள்ளி விவரங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனென்றால் இவற்றால் அவனுக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. சாமானியர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தங்கள் வாழ்க்கைக்கு அரசின் அனுசரணையையும் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுதலுமே ஆகும். புள்ளி விவரங்கள் தேர்தலில் வாக்குகளாக மாறாது. மலையாள திரைப்படமாகிய " எம்புரான் " படத்தைப் பற்றி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தான் கூறிய கருத்து சங்க பரிவார் தலைவர்களை கோபமடைய செய்திருப்பதாக கூறியிருக்கிறார். ஒரு அரசியல் கட்சியின் அங்கத்தினர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்க வேண்டும். நாம் எதிர்க்கட்சிகளின் கடந்த நூற்றாண்டு தவறுகளைக் கூட பெரிதுபடுத்தி சம்பந்தமில்லாமல் பேசுகிறோமே அதுபோலத்தானே எதிர்க்கட்சிகளும் நமது தவறுகளை சுட்டிக்காட்டுவார்கள் என்ற பெருந்தன்மை இருக்க வேண்டும். இவர்கள் " எமர்ஜென்சி " திரைப்படத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். " வங்கிகளில் பொதுமக்கள் பெறும் நகைக் கடன்களுக்கான அசலையை வட்டியையும் ஆண்டுக்கு ஒரு தடவை முழுமையாக திருப்பி செலுத்தி அந்த நகையை மீட்டு மறுநாள் தான் அடகு வைக்க வேண்டும் " என்ற ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்படி மக்கள் பணத்தை ஒரு நாள் அவகாசத்தில் புரட்டுவதற்காக கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய அவல நிலைக்கு ஆளவார்கள். எனவே இந்த விதிமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை கேலிக்கூத்தாக இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ரிசர்வ் வங்கி தனது செயல்பாடுகள் மூலம் ஒரு கேலிக்குரிய பொருளாகி இருப்பது துரதிஷ்டம். பல்சுவை களஞ்சியம் பகுதியில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மடிப்பாக்கம் வாசகி வி.பிரபாவதி அவர்கள் எழுதியிருக்கும் தகவல் குறிப்பு மிக அருமை. -வெ.ஆசைத்தம்பி தஞ்சாவூர் Breaking News:
வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி)-06.04.25