tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி )-15.05.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி )-15.05.25


பொள்ளாச்சி பாலியல் 

வழக்கில் தண்டனை கிடைத்தது போலவே கொடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.


அதற்கு பதிலடியாக 

" குற்றவாளிகளை கைது செய்ததும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததும், வழக்கை சிபிஐக்கு மாற்றியதும் அதிமுக அரசு. வழக்கை விசாரித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பு வழங்கியதும் அதுதான். இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கு எங்கே வருகிறது ? " என்று காட்டமாக எடப்பாடி பழனிச்சாமி கேட்டிருக்கிறார். 


அவரது கேள்வியில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. 


" பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிமை கோருவதற்கு எந்த அரசியல் கட்சிக்கும் உரிமை இல்லை.

ஆதாரங்களை குற்றவாளிகளே உருவாக்கி விட்டார்கள். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது " என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருக்கிறார். 


தான் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியின்

பேச்சுக்கு எதிராக

தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் திருமாவளவன்.


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ள சாராயம் குடித்த 17 பேர் இறந்து விட்டனர். இது தொடர்பாக ஒன்பது பேரை கைது செய்து இருக்கின்றனர்.  கள்ள சாராயத்தை அமிர்தமாக எண்ணி குடித்தவர்களுக்கு

அது ஆலகால விஷமாக மாறிவிட்டது.


பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை பொறுத்துக் கொண்டால் அது உலக சமூகத்திற்கு அழிவை ஏற்படுத்தும் என்று பலுசிஸ்தான் விடுதலை படையினர் அறிவித்திருக்கின்றனர்.


உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் படு பயங்கரமான ஆயுத குழுக்களுக்கு பாகிஸ்தான் தனது முழு ஆதரவையும் வழங்கி வருவதே இதற்கு காரணம்.


 -வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்