திரு.நந்தவனம்" />

tamilnadu epaper

வெற்றி மிக அருகில் தான் இருக்கிறது" நூல் வெளியீடு

வெற்றி மிக அருகில் தான் இருக்கிறது" நூல் வெளியீடு

திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தின் குளிர்மை சிற்றரங்கில் திரு.நந்தவனம் சந்திரசேகரனின் " வெற்றி மிக அருகில் தான் இருக்கிறது" நூல் வெளியீடு நேற்று (04.05.25) நடைபெற்றது.


    திரு.நந்தவனம் சந்திரசேகரன் தன் ஏற்புரையில் தன்னம்பிக்கை நூல்கள் எழுதுவதுதான் தனக்கு அதிகம் உற்சாகம் தருகிறது என்றார்.


    இதுவரை 30 நூல்கள் எழுதியுள்ள அவர், தான் எழுதிய, " வாங்க மனம் விட்டு பேசலாம்" புத்தகம் மணவாழ்வில் இருந்து பிரிய இருந்த ஒரு தம்பதியை சேர்த்து வைத்ததாகக் கூறினார்.


    முன்னதாக நவநீதா பிரதீப் நூலை வெளியிட முகமது ஷபி பெற்றுக் கொண்டார்.


திரு.ஜனனி அந்தோணி ராஜ் வரவேற்புரை ஆற்ற, நித்யா கோபாலன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


  திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் திரு.இந்திரஜித் , ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முகமது ஷபி, பாட்சா பிரியாணி நிறுவனர் திரு. முகமது அபுபக்கர் சித்திக் ,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


   திரு.யோகநாதன் நன்றி நவில விழா இனிதே நிறைவடைந்தது.