ஆரணி சிறுமூர் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் பிரமோற்சவத்தின் ஏழாம் நாள் இரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஊர்கூடித் தேர் இழுத்தனர். அருள்மிகு வீர ஆஞ்சநேயருக்கு செந்தூரம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தரிசனம் செய்தனர்.இரத ஊர்வலம் செண்டமேளத்துடன் நடைபெற்றது. இரத உற்சவ திருவிழாவை கோவில் நிர்வாகிகள் , இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிறப்பாக நடத்தினர்.